ஐ.தே.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: R. Kalaichelvan

05 Nov, 2019 | 11:25 AM
image

புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவையே எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9 மணிக்கும் 12 மணி இடைப்பட்டதொரு நேரத்தில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி பிரதிவாதியின் தரப்பினரால் சிலாபம் மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைய, வாராந்தம் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு, ஒவ்வொரு மாதாந்தத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், சந்தேக நபர் நிபந்தனையை மீறியிருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்குகொண்டுவரப்பட்ட நிலையில் அவர் கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையிலேயே அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் விளக்கமறியலில்  வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55