Ceylinco Life காப்புறுதி நிறுவனம் அண்மையில் இலங்கையின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த Ceylinco Life காப்புறுதிதாரர் குடும்பங்களை அவிசாவளையிலுள்ள பல்வகை பொழுதுபோக்கு வளாகத்திற்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் அவர்கள் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி பிரச்சினைகள், பொறுப்புக்கள் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியாக களிக்க வைத்தபோது Leisure World இன் ஏகாந்தமான சூழல் அவர்கள் அனைவரையும் மெய்மறக்க வைத்தது.
9ஆவது வருடமாக தற்போது இடம்பெற்ற ஆயுட் காப்புறுதி முன்னோடிகளின் குடும்ப சவாரி மெகா ஊக்குவிப்புத் திட்டத்தில் 500 காப்புறுதிதாரர் குடும்பங்களின் உறுப்பினர்கள் தொிவு செய்யப்பட்டு இவ்வாறு அழைத்து செல்லப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 5 குடும்பங்களின் உறுப்பினர்கள் அன்றைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறகுகள் படபடக்கும் ஹெலிகொப்டர்களில் வானிலிருந்து கீழே தெரியும் காட்சிகளைப் பார்த்து ரசித்தவாறே டLeisure World சுற்றிலும் வலம்வந்து குறுகியதூர சவாரியில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.
2016ஆம் ஆண்டிற்கான இந்த முதற் கட்ட சவாரியை அடுத்து இம்மாத இறுதியில் சகல செலவுகளும் வழங்கி வெளிநாட்டு சுற்றுலாக்களில் அழைத்துச் செல்லப்படுவார்கள். ஜுன் மாதம் மேலும் 65 Ceylinco Life காப்புறுதிதாரர் குடும்பங்களில் 50 குடும்பங்கள் சிங்கப்பூருக்கும் 10 குடும்பங்கள் டுபாய்க்கும் 5 குடும்பங்கள் ஜேர்மனிக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள்
Leisure World இல் Ceylinco Life காப்புறுதிதாரர்களுக்கு பல்வகை பொழுதுபோக்கு நிகழ்ச்சி வளாகத்தில் உணவும் மென்பானங்களும் போக்கு வரத்துக்கான வசதிகளும் வழங்கப்படுகின்றன. ஹெலிகொப்டர் சுற்றுலாவில் வெற்றி பெற்ற ஐந்து அதிஷ்டக்கார காப்புறுதிதாரர் குடும்பங்களும் பாணந்துறை, வவுனியா, பேருவளை, திருகோணமலை, திஸ்ஸமஹாராம ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த வருட குடும்ப சவாரி ஊக்குவிப்புத் திட்டத்தில் இதுவரை 2,260 பேர் வெளிநாட்டு விடுமுறை சுற்றுலாக்களை அல்லது மனமகிழ்வுச் சுற்றுலாக்களையும் வென்றெடுத்துள்ளனர். இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தம் 17,000 பேர் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளனர்.
Ceylinco Life குடும்ப சவாரி ஊக்குவிப்புத் திட்டத்தில் இலங்கை திரைப்பட நட்சத்திரங்களான சிறியந்த மென்டிஸ், சஞ்ஜீவனி வீரசிங்க, றொஷான் ரணவண, அவரது மனைவி குஷ்லானி ஆகியோரும் உள்ளூர் சுற்றுலாக்களிலும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களிலும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2004ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் ஆயுட் காப்புறுதித் துறையில் சந்தை முன்னோடியாக விளங்கி வரும் Ceylinco Life இல் ஏறத்தாழ 10 லட்சம் பேர் ஆயுட் காப்பீட்டைப் பெற்றுள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM