இன­வா­திகள் கூட்டுச்  சேர்ந்­துள்ள அணியை ஜனா­தி­பதித்  தேர்­தலில் சிறு­பான்மை மக்கள் ஒட்­டு­மொத்­த­மாக நிரா­க­ரிக்­க­ வேண்­டு­மென அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் கோரிக்­கை­ வி­டுத்தார். 

சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்து நேற்றுக் காலை முல்­லைத்­தீவில் இடம்­பெற்ற பொதுக்­கூட்­டத்தில் அமைச்சர் உரை­யாற்­றினார். அவர் கூறி­ய­தா­வது,

 சிறு­பான்மை மக்­களை "வந்தான் வரத்தான்" எனக்  கருதும் இன­வா­தி­க­ளுக்கு இந்தத் தேர்­தலில் நாம் ஒன்­று­பட்டு பாடம் ­பு­கட்­டுவோம். நமது சமூகம் தன்­மா­னத்­து­டனும், தலை­கு­னி­வின்­றியும் வாழ­ வேண்டும் என்­ப­தற்­கா­கவே சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிக்­கின்றோம். கடந்த ஒரு தசாப்­த­ கா­ல­மாக இன­வா­திகள் சிறு­பான்மை மக்­களைக் கொடு­மைப்­ப­டுத்­து­கின்­றனர். கொச்­சைப்­ப­டுத்­து­கின்­றனர். மதக்­க­ட­மை­க­ளுக்கு தடை­ வி­திக்­கின்­றனர். மதத்­த­லங்­களை உடைக்­கின்­றனர். எங்­களை தீவி­ர­வா­தி­க­ளா­கவும், இன­வா­தி­க­ளா­கவும் சித்­த­ிரித்து இந்த நாட்டில் பெரி­ய ­பி­ர­ளயம் ஒன்றைக் கிளப்­பி­ வ­ரு­கின்­றனர். சிறை­யில் ­வாடும் தமிழ் இளை­ஞ­ர்­களை விடு­விக்­கச்­சொல்லி கோரிக்கை விடுத்தால்  அதனை இன­வா­த­மாக பெரும்­பான்­மைச்­ ச­மூ­கத்தில் காட்­டு­கின்­றனர்.

காணாமல் போன­வர்­களைக் கண்­டு­பி­டித்­துத் ­த­ரு­மாறு கேட்டால் அதுவும் அவர்­களால் இன­வா­த­மாக பார்க்­கப்­ப­டு­கின்­றது. நாங்கள் எவ­ருக்கும் இரண்டாம் தரப்­ பி­ர­ஜை­க­ளாக வாழ­ வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. தன்­மா­னத்­து­டனும் சுய­கெ­ள­ர­வத்­து­டனும் பெரும்­பான்மைச் சமூகம் அனு­ப­விக்கும் அத்­தனை உரி­மை­க­ளையும் பெற்று வாழ்­வ­தற்கு நாம்  உரித்­து­டை­ய­வர்கள். அவ்­வா­றான ஒரு சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு  நல்ல ஒரு தலை­வ­னாக  சஜித் பிரேம­தா­சவை இனம்­ கண்­டுள்ளோம். அவரை இந்த நாட்­டு ­மக்கள் ஒரு தேசிய வர­லாற்று நாய­க­னாக இப்­போது பார்க்­கின்­றனர்.

"கடந்த காலங்­களில் நடந்­த­து­ போ­லன்றி  அனைத்து இனத்­த­வர்­க­ளையும்  சம­மாக நடத்­துவேன் எனவும் நிம்­ம­தி­யுடன் வாழச்­ செய்வேன்" எனவும் சஜித் உறு­தி­ய­ளித்­துள்ளார். யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட இந்த மாவட்ட மக்­க­ளுக்கு பல்­வேறு தேவைகள் உள்­ளன. யுத்­தத்தின் பிறகு முதன்­மு­த­லாக துணுக்காய், பாண்­டி­ய­கு­ளத்­தி­லேயே மீள்­கு­டி­யேற்­றத்தை பூச்­சி­யத்திலிருந்து ஆரம்­பித்தோம். மக்­களின் தேவை­களும் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களும் இன்னும் பூர­ணப்­ப­டுத்தப்படாத நிலையில் அவற்­றையும்  எதிர்­கா­லத்தில் பூர்த்­தி­ செய்­ய வேண்டி இருக்­கின்­றது. எனவே இன­வா­தி­களின் கைக­ளுக்குள் இந்த நாடு மீண்டும் சிக்­கினால் நமது எதிர்­பார்ப்­புகள்  அனைத்­துமே ஏமாற்­ற­மாகி விடும். நேர்­மை­யான தலை­வ­ரான சஜித்தை ஆதரித்து அவரை வெற்றிபெறச் செய்வோம்..

இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர் ஹக்கீம், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் டி. எம். சுவாமிநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நந்தன் உட்பட பலர் உரையாற்றினர்.