பிரான்ஸின் வடக்குப் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்த 33 பேரில் இலங்கை பிரஜைகளும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸின், பாரிஸ் நகரிலிருந்து லண்டன் நோக்கி பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது பஸ்ஸில் பயணித்த 33 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது.

11 பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களும், 5 அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களும், 2 ரோம் நாட்டைச் சேர்ந்தவர்களும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் அவுஸ்திரேலிய, மொரிஷியஸ், ஜப்பான் மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கேள இந்த விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.