(இரா. செல்­வ­ராஜா)

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவை கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வது தொடர்­பான இறுதித் தீர்­மானம் இன்­றி­ரவு  நடை­பெ­ற­வுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய செயற்­குழு  கூட்­டத்தில் எடுக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தாக கட்­சியின் பொது­ச் செ­ய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் காலி வீதியில் அமைந்­துள்ள அதன் தலை­மை­ய­கத்தில் கட்­சியின் தலைவர்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்­றி­ரவு 7மணிக்கு மத்­திய செயற்­குழு கூட­வி­ருக்­கின்­றது.

இந்த செயற்­குழு கூட்­டத்தில் பொது­ஜன பெர­முன கட்­சியில் இணைந்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உட்­பட அக்கட்­சியில்  இணைந்த பல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொடர்­பா­கவும் ஆராய்ந்து இறுதி  முடிவு  எடுக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும்  தயா­சிறி  ஜய­சே­கர  தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­ப­தியும் கட்­சியின்  சிரேஷ்ட ஆலோ­ச­க­ரு­ம­டான சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடந்த  புதிய ஜன­நா­யக  முன்­ன­ணிக்கு ஆத­ரவு  தெரி­விக்கும்  அர­சியல் கட்­சி­க­ளி­னதும் சிவில்  அமைப்­பு­க­ளு­ட­னான  புரிந்­து­ணர்வு  ஒப்­பந்த  வைப­வத்தில்  கலந்து கொண்டு  ஜனாதிபதி  வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு உத்தியோகபூர்வ  ஆதரவை  தெரிவித்ததுடன் புரிந்துணர்வு  ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டார்.