2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை தேவை 

Published By: MD.Lucias

26 May, 2016 | 08:56 AM
image

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வது குறித்த பேச்­ச­ுவார்த்­தையும் தோல்­வியில் முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றது. இதனால் தமிழ் முற்­போக்கு முன்­ன­ணி­யினர் இன்று திட்­ட­மிட்­ட­படி போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளனர்.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள விவ­காரம் குறித்த கூட்டு ஒப்­பந்தம் கடந்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி காலா­வ­தி­யா­கி­யி­ருந்­தது. இந்த ஒப்­பந்தம் காலா­வ­தி­யாகி ஒரு­வ­ரு­டமும் இரண்டு மாதங்­களும் ஆகின்­ற­போ­திலும் இது­வரை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஒரு ரூபா கூட சம்­பள உயர்வு கிடைக்­க­வில்லை. இதனால் அவர்கள் மிகுந்த கஷ்­டங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.

இயற்கை அனர்த்தம் ஒரு பக்கம் அவர்­களை வாட்­டி­வ­ரு­கின்­றது. மறு­பக்கம் விலை­வாசி ஏற்றம் அவர்­களை படாத பாடு­ப­டுத்­து­கின்­றது. இந்த நிலையில் விலை­வா­சிக்கு ஏற்ற சம்­பள உயர்வு இன்­மை­யினால் அவர்கள் பெரும் கஷ்­டங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.

கடந்த வருடம் மார்ச் மாதம் கூட்டு ஒப்­பந்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் உட்­பட கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்­கங்கள் கோரிக்கை விடுத்­து­வந்­தன. இந்த விடயம் குறித்து முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துடன் இந்த தொழிற்­சங்க பிர­தி­நி­திகள் பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்­தனர். ஏழு சுற்­றுப்­பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­ற­போ­திலும் ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்கு தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தினர் இணக்கம் தெரி­விக்­க­வே­யில்லை.

சர்­வ­தேச சந்­தையில் தேயி­லையின் விலை வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தா­கவும் இதனால் தாம் பெரும் நட்­டத்தை சந்­தித்து வரு­வதால் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்­பினை வழங்க முடி­யாது என்றும் அவர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். இதனால் சம்­பள அதி­க­ரிப்பு விவ­கா­ர­மானது இழு­பறி நிலைக்கு சென்­றி­ருந்­தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாரா­ளு­மன்றத் தேர்­தலும் நடை­பெற்­றி­ருந்­தது. இந்தத் தேர்­த­லின்­போது தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் தாம் ஆட்­சிக்கு வந்தால் இதனை பெற்­றுக்­கொ­டுப்போம் என்றும் மலை­ய­கத்தை சேர்ந்த அர­சியல் கட்­சிகள் உறு­தி­வ­ழங்­கி­யி­ருந்­தன.

தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டங்­களின் போது சம்­பள உயர்வு விடயம் தொடர்பில் ஒரு­வரை ஒருவர் குற்­றம்­சாட்­டிய மலை­யக அர­சியல் கட்சித் தலை­வர்கள் ஆட்­சிக்கு வந்­ததும் ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் என்று அறி­வித்­தி­ருந்­தன. இதனால், தேர்­தலின் பின்னர் தமக்கு சம்­பள உயர்வு கிடைக்கும் என்று தோட்டத் தொழி­லா­ளர்கள் பெரும் எதிர்­பார்ப்­புடன் காத்­தி­ருந்­தனர். ஆனால், தேர்தல் முடி­வ­டைந்த பின்­னரும் சம்­பள உயர்வு என்­பது வெறும் கானல்­நீ­ராக மாறி­யி­ருக்­கின்­றது. இதனால் தோட்டத் தொழி­லா­ளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்­துள்­ள­துடன் விரக்­தி­நி­லைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்கு தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தினர் மறுப்பு தெரி­வித்­த­தை­ய­டுத்து தொழி­ல­மைச்சர் ஜோன் சென­வி­ரட்­ணவின் தலை­மையில் தொழிற்­சங்­கத்­தி­னரும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தி­னரும் கலந்­து­கொண்ட கூட்டம் நடை­பெற்­றது. அதிலும் எந்­த­வித இணக்­கப்­பா­டு­களும் ஏற்­ப­ட­வில்லை. அர­சாங்கம் இரு­த­ரப்­பையும் இணங்­கச்­செய்­வ­தற்கு முயற்­சித்த போதிலும் அந்த முயற்­சியும் தோல்­வி­ய­டைந்­தி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து கடந்த வர­வு-­–செ­லவுத் திட்­டத்தில் தனி­யார்­து­றை­யி­ன­ருக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென பரிந்­து­ரைக்­கப்­பட்ட 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கும் வழங்­க­வேண்­டு­மென்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது. பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய தொழில் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ண இதற்­கான பரிந்­து­ரையைச் செய்­த­துடன் இது குறித்த வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்­டது.

ஆனாலும் 2500 ரூபா சம்­பள அதி­கரிப்பை வழங்­கு­வ­தற்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. இத­னை­ய­டுத்து கடந்த ஏப்ரல் மாத சம்­ப­ளத்­துடன் இந்தத் தொகை அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் இல்­லையேல் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­ய­நிலை ஏற்­படும் என்றும் தொழில் அமைச்சு அறி­வித்­தி­ருந்­தது. இந்த அறி­வித்தல் விடுக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஏப்ரல் மாத சம்­ப­ளத்­து­ட­னாவது 2500 ரூபா அதி­க­ரிப்பு சேர்க்­கப்­ப­டு­மென்று தோட்டத் தொழி­லா­ளர்கள் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். ஆனால், அந்த எதிர்­பார்ப்பும் நிறை­வே­ற­வில்லை.

இந்தப் பின்­ன­ணியில் கடந்த 10 ஆம்­தி­க­திக்குள் இந்த சம்­பள அதி­க­ரிப்பை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­க­வேண்­டு­மென்றும், இல்­லையேல் தொழிற்­சங்க போராட்­டத்தில் இறங்­க­வுள்­ள­தா­கவும், தமிழ் முற்­போக்கு முன்­ன­ணி­யினர் அறி­வித்­தி­ருந்­தனர். கடந்த மே தினத்­தன்று தல­வாக்­க­லையில் இடம்­பெற்ற தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் மே தினக்­கூட்­டத்தில் உரை­யாற்­றிய முன்ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் உப­த­லை­வரும் அமைச்­ச­ரு­மான பி. திகாம்­பரம், ஆகியோர் இந்த அறி­விப்­பினை விடுத்­தி­ருந்­தனர். ஆனால், அவர்கள் வழங்­கிய காலக்­கெ­டுவும் தற்­போது முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றது. இத­னா­லேயே இன்­றைய தினம் தொழிற்­சங்க ரீதி­யி­லான போராட்­டத்தை தமிழ் முற்­போக்கு முன்­ன­ணி­யினர் ஆரம்­பிக்­க­வுள்­ளனர்.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று முன்­தினம் மாலை தமிழ் முற்­போக்கு முன்­ன­ணியின் தலை­வர்­க­ளான மனோ கணேசன், பி. திகாம்­பரம் ஆகி­யோ­ருக்கும் தொழில் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ண, பெருந்­தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க, அபி­வி­ருத்தி மூல உபாய முறைகள் அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம ஆகி­யோ­ருக்­கு­மிடையில் பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு குறித்து முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­ட­பின்­னரே இந்த சந்­திப்பு இடம்­பெற்­றி­ருந்­தது.

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்கு முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தினர் இணக்கம் தெரி­விக்­க­வில்லை என்றும் மாறாக தொழி­லா­ளர்­க­ளுக்கு தோட்­டங்கள் தோறும் இரண்டு ஏக்கர் நில­ம­ளவில் வழங்கி அதில் உப பயிர்ச்­செய்­கை­களை தொழி­லா­ளர்கள் மேற்­கொள்­வ­தற்கு வசதி செய்­வ­தா­கவும் இதன் மூலம் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் வரு­வாயை தேட முடியும் என்று முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தினர் யோசனை முன்­வைத்­த­தா­கவும், அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம தமிழ் முற்­போக்கு முன்­ன­ணியின் தலை­வர்­க­ளுக்கு எடுத்­து­ரைத்­தி­ருக்­கின்றார்.

முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தி­னரின் இந்த யோச­னையை சாத­க­மாக பரி­சீ­லிக்க முடியும் என்றும் ஆனால் முதலில் இடைக்­கால நிவா­ர­ண­மாக 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­க­வேண்­டு­மென்று தமிழ் முற்­போக்கு முன்­ன­ணியின் தலை­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். ஆனால், இதற்கு சாத­க­மான பதில் கிடைக்­கா­மை­யினால் பேச்­சு­வார்த்தை இழு­ப­றியில் முடி­வ­டைந்­துள்­ளது. இத­னை­ய­டுத்து இன்­றைய தினம் திட்­ட­மிட்­ட­படி போராட்­டத்தை நடத்­து­வது என்று தமிழ் முற்­போக்கு முன்­ன­ணி­யினர் தீர்­மா­னித்­துள்­ளனர்.

உண்­மை­யி­லேயே ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பு என்­பது தற்­போ­தைய நிலையில் சாத்­தி­யப்­ப­டாத ஒரு விட­ய­மாக இருக்­கலாம். ஆனால் ஒரு நாளைக்கு 100 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்குக்கூட தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினர் பின்னடிப்பதும் அதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது நழுவல்போக்கை கடைப்பிடிப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடுகள் அல்ல.

எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாௌான்றுக்கு 100 ரூபா வீதம் 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான அழுத்தங்களை மலையக அரசியல் தலைமைகளும் தொழிற்சங்க தலைமைகளும் ஒன்றிணைந்து வழங்கவேண்டும். முதலில் தற்காலிக நிவாரணமாக இந்த 2500 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்துவிட்டு பின்னர் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் 1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முயற்சிக்கவேண்டும். இதனைவிடுத்து அரசியல் போட்டா போட்டிகளில் அரசியல் தலைமை கள் ஈடுபடுமானால் இறுதியில் பாதிக்கப்படப்போவது மலையக தோட்டத் தொழிலாளர்களேயன்றி வேறு யாருமில்லை என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54