சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், தயாராகிவரும் ‘தர்பார்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில். சூர்யா நடித்திருக்கும் ‘சூரரை போற்று’ என்ற திரைப்படமும் பொங்கலன்று வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தீபாவளிக்கு விஜய் நடிப்பில் ‘பிகில்’ என்ற திரைப்படமும், கார்த்தி நடிப்பில் ‘கைதி’ என்ற திரைப்படமும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

அதேபோல் அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படம் வெளியாகிறது. அந்தப் படத்திற்கு போட்டியாக சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சூரரைப்போற்று’ என்ற திரைப்படம் வெளியாகும் என தெரிய வருகிறது.

இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் மாதத்தில் உறுதியாக தெரியவரும் என தமிழ் திரையுலக வணிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 ரஜினியின்‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரும், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.