(செ.தேன்மொழி)
எல்பிட்டிய - கஹாத்துட்டுவ பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்பிட்டிய குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய நேற்று  ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.ஹொரன்கல்ல மற்றும் நியாகம பகுதியைச் சேர்ந்த 29,35 ஆகிய வயதுடைய இருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி , ரிவோல்டர் வகை துப்பாக்கிகளும் , 9 மில்லி மீற்றர் துப்பாக்கி தோட்டாக்கள் ஏழும் , 560 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் டிஜிட்டல் முறையிலான தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.