போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு இதுவரையான  காலப்பகுதிக்குள் போதைப்பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் 35 ஆயிரத்து 702 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஆயிரத்து 638 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் இதுவரை கைப்பற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.