நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு இன,பேதங்களை களைவதே முதற்படி - ஏ.எஸ்.பி.லியனகே செவ்வி

04 Nov, 2019 | 02:39 PM
image

பேதமின்றி அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் வாழுவதற்கான சூழல் ஏற்படுத்தப்படுத்தப்பட்டாலே நாட்டிற்கு சுபீட்சமான எதிர்காலம் உருவாகும் என்று இலங்கை தொழிலாளர் கட்சியின் தலைவரும் கட்டார், நைஜீரியாவுக்கான முன்னாள் தூதுவருமான ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுமையான விபரம் வருமாறு,

கேள்வி:- மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளமைக்கான காரணம் என்ன?

பதில்:- ஆம், நான் ஜனாதிபதி தேர்தலில் 2010 ஆண்டும், 2015ஆம் ஆண்டும் போட்டியிட்டிருந்தேன். நான் யாருடைய வாக்குகளை பறிப்பதற்காகவே அல்லது பிளவு படுத்தவதற்காகவோ களமிறங்கவில்லை. இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் சரியான பதையில் இந்த நாட்டினை வளர்த்துச் செல்வதில் பங்களிப்புச் செய்ய வேண்டிய கடமை எனக்கு உள்ளதாக உணர்கின்றேன்.

சுதந்திரத்தின் பின்னரான இலங்கை அனைத்துவிடயங்களிலும் பின்நோக்கிய நிலையிலேயே உள்ளது. இதுமிகவும் துர்ப்பாக்கிய நிலைமையாகும். ஆகவே பொதுமக்கள் மத்தியில் எதிர்காலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி நாட்டில் உண்மையான மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்.

இதற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினைப் பெறுவதால் எந்தவிதமான பயனுமில்லை. ஆகவே நாட்டின் தலைமைத்துவத்தினை ஏற்பதால் மட்டுமே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மேலும் நாம் நினைக்கும் மாற்றங்களை ஒரே இரவில் கொண்டுவந்துவிடமுடியாது. அதனைப் படிப்படியாகத் தான் கொண்டு வர முடியும்.

கேள்வி:- கடந்த இரண்டு தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருந்தபோதும் கூறக்கூடியளவு வாக்குவங்கியினை தாங்கள் கொண்டிருப்பதாக காணமுடியவில்லையே?

பதில்:- பல்வேறு தரப்புக்கள் பல்வேறு நிலைப்பாடுகளை முன்வைத்து தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன. என்னைப்பொறுத்தவரையில் முதன்முதலாக எவ்வாறான கொள்கை பிரகடனத்தினைச் செய்தேனோ அதில் எவ்விதமான அடிப்படை மாற்றங்களையும் மேற்கொள்ளாது காலமாற்றத்திற்கு ஏற்ற நவீனத்துவத்தினையே உள்ளீர்த்துக்கொண்டிருக்கின்றேன்.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் எனக்கு மக்கள் அளித்த வாக்குகளில் கணிசமான முன்னேற்றம் உள்ளது. நான் மக்களின் அடிப்படை விடயங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய விடயங்களுக்கே முதன்மைத் தானம் வழங்கியுள்ளேன். தேர்தலில் வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் படிப்படியாக பொதுமக்கள் எனக்கு அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கையில் ஏற்படுகின்ற அதிகரிப்பானது எனது கொள்கைத்திட்டங்களுக்கு அவர்களிடத்திலிருந்து கிடைக்கும் அங்கீகாரமாகவே பார்க்கின்றேன். அத்துடன் விசேடமாக கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு வாக்குகளை பெற்றவர்கள் பட்டியலில் நான் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்கின்றேன். இந்த முன்னேற்றம் நாடாளவிய ரீதியில் விரைவில் ஏற்படும் என்றும் எதிர்பார்கின்றேன்.

கேள்வி:- தற்போதைய தேர்தலில் உங்களுடைய கொள்கைத்திட்டங்கள் பிரதான வேட்பாளர்களிடத்திலிருந்து எந்த அடிப்படையில் வேறுபட்டிருக்கின்றன?

பதில்:- முதலாவதாக இந்த நாட்டில் அனைத்து இனங்களும் இன, மத, குல, மொழி பேதமின்றி  சமத்துவமானவர்களாகவும்ரூபவ் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடனும் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். இதில் எந்தவிதமான பாகுபாடுகளுக்கும் இடமளிக்ககூடாது என்பதும் எனது நிலைப்பாடாக இருக்கின்றது.

ஒவ்வொரு சமுகங்களுக்கு காணப்படும் கலாசாரரூபவ் பாரம்பரியங்கள் பாதுகாக்கப்படுவதுடன் அவை சீர்கேடுகளுக்கு உள்ளாகத வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அத்துடன் வலுவான சிவில் அமைப்புக்கள் கட்டியெழுப்ப படுவதோடு அவற்றை அரச துறையுடன் இணைத்துக் கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான திட்டங்களை வகுத்தல் இன்றியமையாததாகின்றது.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானதொரு விடயமாகின்றது, இதற்காக உள்ளுர் உற்பத்திகளையும் முதலீடுகளையும் ஊக்குவிப்பதோடு வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது. இதற்காக விசேட செயற்றிட்டமொன்று ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. அத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள், மற்றும் நாட்டின் வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்டவை தொடர்பில் பிரத்தியேகமான திட்டமொன்று வரைய வேண்டியுள்ளது.

அதேநேரம், வறுமையை ஒழிப்பதற்காக இலகு வங்கிகடன்களை வழங்குதல், அரச தனியார் கட்டமைப்புக்களை ஒன்றிணைத்து திட்டங்களை முன்னெடுத்தல், அரசாங்கத்தின் தலையீடுகளை தவிர்த்து துறைசார் நிபுணர்கள் குழுக்களின் ஊடாக முதலீடுகள்ரூபவ் உடன்படிக்கைகள் தொடர்பான நடவடிக்ககைளை முன்னெடுத்தல் ஆகிய முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் கல்விரூபவ் சுகாதாரம் உட்பட உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான அவசியமாகவுள்ளது.

கேள்வி:- பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் உங்களுக்கு யார் சவாலாக இருப்பார் என்று கருதுகின்றீர்கள்?

பதில்:- பிரதான வேட்பாளர்களில் யார் எனக்கு சவால் என்பதனை விடவும் பிரதான வேட்பாளர்களின் கொள்கைகத்திட்டங்கள் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள தரப்பினர்களை ஆகியவற்றை பொதுமக்கள் ஆழமாக உற்றுநோக்கியுள்ளனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பிரதான தரப்பினர் மீது பொதுமக்களுக்கு நல்ல அபிப்பிராயமொன்று இருப்பதாக காணமுடியாதுள்ளது. குறிப்பாக, ஜனநாயக விரோத செயற்பாடுகள்ரூபவ் ஊழல் மோசடிகள் போன்றவற்றால் மக்கள் ஆட்சியாளர்கள் மீது கடுமையான வெறுப்பினையும் அதிருப்தியையும் கொண்டிருக்கின்றார்கள். இதனால் இம்முறை தேர்தலில் பங்கெடுப்பதா இல்லையா என்ற தீர்மானத்திற்கு வரமுடியாது ஒருவிதமான சலிப்படைந்த நிலையிலேயே உள்ளார்கள். இவர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தினை அளிப்பதற்கு இன்று யாருமில்லை. ஜே.வி.பினால் கூட அது முடியாது. ஆகவே தான் என்போன்றவர்களுக்கு உண்மையான மாற்றத்தினை எதிர்பார்த்து வாக்களிக்குமாறு கோருகின்றேன்.

இதனைவிடவும் இந்த நாட்டுக்கான சேவையாற்றியவர்கள் என்ற அடிப்படையில் தற்போது போட்டிக்களத்தில் உள்ளவர்களில் நானே தகுதிநிலையில் முன்னணியில் இருக்கின்றேன். காரணம், நான் இந்த நாட்டின் தூதுவராக பணியாற்றியுள்ளதோடு அக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு செயற்றிட்டங்களை முன்னெடுத்து எமது நாட்டின் வளர்ச்சிப்பாதைக்கு அடித்தளமிட்டுள்ளேன்.

கேள்வி:- சிறுபான்மை சமூகங்களுக்கு கடந்த காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் அவர்களின் தீர்மானம் எவ்வாறு அமைய வேண்டும் என்று எதிர்பார்கின்றீர்கள். அவர்களின் கோரிக்கைகள் குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- சிறுபான்மையின சமூகங்களை நிராகரித்து எந்தவொரு ஆட்சியாளர்களாலும் நாட்டை நிருவகித்துச் செல்லமுடியாது. அவ்வாறான சிந்தனையில் செயற்படுவதானது மிகப்பெரும் தவறாகும். சிறுபான்மை சமூகத்தினரும் இந்த நட்டின் பிரஜைகளாகவே உள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் கருத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

கடந்தகாலத்தில் ஏற்பட்ட போர் நிலைமைகளால் இனங்களுக்கிடையிலான விரிசலும், சந்தேகங்களும் வலுவாக காணப்படுகின்றது. அவற்றைப்போக்கி இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை உருவாக்குவாக்குவது தொடர்பில் தான் நாட்டிற்கு தலைமை தாங்கப்போகின்றவர்கள் சிந்திக்க வேண்டும்.

மாறாக இனங்களை பிளவு படுத்தி வாக்குகளை பெறுவதற்கு முயலக்கூடாது. கடந்த காலங்களில் சிறுபான்மை சமூகங்கள் தமது ஆணையை ஆட்சியாளர்களுக்கு வழங்கியபோதும் அவர்களது வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. இதனால் அவர்களுக்கு அச்சமான மனநிலையொன்று ஏற்பட்டுள்ளது. அதனைபோக்குவதற்கு சிவில் தரப்பினர் முன்வரவேண்டும் என்பதோடு என் போன்ற முற்போக்கு சிந்தனைவாத வேட்பாளர்களை அடையாளம் காட்டுவதும் முக்கிய கடமையாகின்றது.

கேள்வி:- தற்போது தமிழ்த் தரப்பு 13அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றமையை எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- தமிழ் தரப்புக்கள் இவ்வாறான விடயங்களை முன்னெடுப்பதை நான் தவறென்று கோரவில்லை. அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களினை அடிப்படையாக வைத்து அவர்கள் செயற்படுகின்றார்கள். ஆனால் இவ்வாறான நிபந்தனைகளை விதிப்பதற்கு இது நேரமல்ல. காரணம், அவர்களின் கோரிக்கைளில் உள்ள வடக்கு கிழக்கு இணைப்புரூபவ் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு என்பன தென்னிலங்கையில் பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்தும் வகையில் தான் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே அத்தகைய விடங்களை முன்னிலைப்படுத்தும் போது தென்னிலங்கையில் மாறுபட்ட சூழலை ஏற்படுத்தி நன்மைபெறவே தேர்தல்களத்தில் உள்ள வேட்பாளர்கள் முனைவார்கள்.

எனவே அந்த விடயங்களை பொருத்தமான தருணத்தில் மேற்கொள்ள வேண்டும். மேலும் முற்போக்கு சிந்தனையாளர்கள், சிவில் அமைப்புக்களுடன் தமிழ் தலைவர்கள் இணைந்து கலந்தாலோனை நடத்தி தென்னிலங்கை மக்களுக்கு யதார்த்த நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் பரஸ்பரம் இரு சமுகங்களுக்கும் இடையில் ஐயப்பாடான சூழலே தொடர்ந்தும் இருக்கும். இதனால் நியாயமான கோரிக்கைகள் கூட கருத்திற்கொள்ளப்படாத நிலைமையே தொடருவதற்கே வாய்ப்புக்கள் உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right