பொதுஜன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஐபக்ஷவிற்கு ஆதரவு கோரி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ஷ இன்று திங்கட்கிழமை யாழ் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

ஐனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வடக்கிற்கு விஐயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ் நகரிலுள்ள வீதிகளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் வர்த்தக நிலையங்களுக்கும் சென்று ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.