விஷாலின் திரைப்படங்களில் புதுமுகங்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகின்றது. தற்போது இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் தயாராகிவரும்  ‘துப்பறிவாளன் 2’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஆஷ்யா நடிக்க உள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு லண்டன் மாநகரில் நடைபெறவிருக்கிறது. 

இந்நிலையில் படத்தின் நாயகன் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க, நடிகை லவ்லி சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை லவ்லி சிங்கிற்கு ஆஷ்யா என்று பெயர் சூட்டியிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.  

இந்தப்படத்தில் இவர்களுடன்  பிரசன்னா, நாசர், ரகுமான், சுரேஷ் சக்கரவர்த்தி, நடிகை கௌதமி உள்ளிட்ட பல பிரபளங்கள் நடிக்கிறார்கள்.

‘துப்பறிவாளன்’ படத்தின் முதல் பாகத்தில் நடிகை அனு இம்மானுவேல் என்பவரைத் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் மிஷ்கின், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆஷ்யா என்ற நடிகையை அறிமுகப்படுத்துகிறார்.

 நடிகர் விஷாலின் திரையுலக பயணத்தில் பானு (தாமிரபரணி), தனுஸ்ரீதத்தா (தீராத விளையாட்டுப் பிள்ளை) ஐஸ்வர்யா அர்ஜுன் (பட்டத்து யானை) அனு இம்மானுவேல் (துப்பறிவாளன்) ஆகிய புதுமுகங்களுடன் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.