இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை (SLRC) பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு எதிரான மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த வழக்கு  விசாரணைக்கு அடுத்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி வலையமைப்பை கையகப்படுத்துமாறு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை சமூக ஆர்வலர்கள் தம்பர அமிலா தேரர் , பேராசிரியர் சந்திரகுப்தா தேனுவர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க ஆகியோர் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதிகளான புவனேகா அலுவிஹார, முர்து பெர்னாண்டோ மற்றும் எஸ். துரைராஜா ஆகியோரின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.