இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் ஹர்சிங்புரா கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிவானி நேற்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த நிலையில், திடீரென காணாமல் போனார். அவரை பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடினர்.
ஆயினும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் கர்நாலில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுமி விழுந்த விவகாரம் இரவு 9 மணிக்கு பெற்றோருக்கு தெரியவந்தது.
இதையடுத்து தேசியபேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆழ்துளை கிணற்றின் அருகில் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி மீட்கும் முயற்சி இடம்பெற்றது.
சிறுமிக்கு ஒக்சிசன் வழங்கப்பட்டு வந்தது. கேமரா மூலம் பார்த்த போது சிறுமியின் கால்கள் மட்டுமே தெரிந்த நிலையில் சிறுமி தலைகீழாக விழுந்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை, சிறுமி மீட்கப்பட்டு உடனே வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சுமார் 16 மணி நேரம் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சிறுமி, 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
ஆழ்துளை கிணற்றை மூடாமல் பெற்றோர் அலட்சியமாக இருந்ததால் சிறுமி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த வாரம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் 80 அடி ஆழத்தில் விழுந்த நிலையில், சுமார் 5 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM