பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 148 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று இருபதுக்கு - 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது.

சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை குவித்தது.

ரேகித் சர்மா 9 ஓட்டத்துடனும், தவான் 41 ஓட்டத்துடனும், ராகுல் 15 ஓட்டத்துடனும், ஸ்ரேயஸ் அய்யர் 22 ஓட்டத்துடனும், ரிஷாத் பந்த் 27 ஓட்டத்துடனும், சிவம் டூப் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க வோசிங்டன் சுந்தர் 14 ஓட்டத்துடனும், குருனல் பாண்டியா 15 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்கதிருந்தனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் சைபுல் இஷ்லாம், அமினுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், அபிப் ஹுசேன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.