(எம்.மனோசித்ரா)

மக்களின் தேவையையும் அவர்களது நிலைப்பாட்டையும் அறிந்து செயற்படும் தலைவரே அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் ஐ.தே.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார். 

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் பத்து இலட்சத்துக்கும் குறைவான கடன் பெற்று அதனை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்த முடியாமல் கடன் பற்றிய தகவல் பணியகத்தின் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபட மேலும் ஒருவருடம் கால அவகாசம் வழங்கப்படும் என்று 

இதன் மூலம் கடன் பிரச்சினையால் வாழ்க்கையில் முன்னேற முடியாமலிருப்பவர்கள் மேலெழுவதற்கான வாய்ப்பளிக்கப்படும் அவர் குறிப்பிட்டார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.