வேலை நேரத்தில் ஆண் பொலிஸ் அதிகாரி ஒருவரும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரும் உடலுறவில் ஈடுட்டதை, தாமே புகைப்படம் எடுத்து தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததை தொடர்ந்து இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மெக்சிகோவில் இடம்பெற்றுள்ளது.

மெக்சிகோவைச் சேர்ந்த இரு ஜோடி பொலிஸ் அதிகாரிகள் தமது வேலை நேரத்தில் சீருடை அணிந்த வகையில் வீதியில் இருந்து கார் ஒன்றினுள் வைத்து உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை படமெடுத்து பின்னர் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். 

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிய வந்தததையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலை துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே குறித்த நபர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களுக்கு இச் சம்பவம் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் எனவும் மெக்சிகோ நாட்டின் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.