(நெவில் அன்தனி)

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் கடைசி தினமான இன்று காலை நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த வி. ஷானுஜன் 38.46 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

( படம் : எம். சில்வெஸ்டர் )

வட மாகானம் சார்பாக கோலூன்றிப் பாய்தலில் புவிதரன், டக்ஷிதா, திசாந்த், தீப்பிகா, குண்டெறிதலில் மிதுன்ராஜ் ஆகியோரைத் தொடர்ந்து ஆறாவது வீரராக ஷானுஜன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.