இலங்கைக்கு மேலும் 164 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கும் சர்வதேச நாணய நிதியம் 

Published By: Vishnu

03 Nov, 2019 | 09:41 AM
image

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவுபடுத்தல் கடன் வசதிகளின் கீழ் இலங்கை தொடர்பிலான 6 ஆவது மதிப்பீடு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. 

அதற்கமைவாக, 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியினை 6வது கட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த 6 ஆவது கட்ட நிதி வழங்கப்படுவதை அடுத்து, விரிவுபடுத்தப்பட்ட கடன் வசதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மொத்த நிதியின் அளவு 1.31 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.  

இதேவேளை, இந்த கடன்வசதி வேலைத்திட்டம், அடுத்த வருடம் ஜுலை மாதம் 2 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.

இந்தக் கடன் திட்டத்தின் கீழ், இலங்கைக்கு வழங்கப்படவுள்ள மொத்த கடன் தொகை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்