தெல்தோட்டை நாரங்கன் தோட்டபகுதியில் இன்று காலை 7 மணியளவில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 07 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெல்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனார்.

குறித்த விபத்தில் 07 குடும்பங்களை சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கிராம உத்தியோகத்தர் ஊடாக சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ நிருபா்.