ரஷ்யாவின் டைமென் நகரிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி புறப்பட்ட விமானமொன்று அவசர அவசரமாக பாதுகாப்பாக மொஸ்கோவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

80 பயணிகள் மற்றும் 6 பாணியாளர்களுடன் பயணித்த 'சுகோய் சூப்பர்ஜெட் 100' என்ற விமானமே நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 6.15 மணியளவில் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் பகுதியை பறவைக்கூட்டம் தாக்கியமையினால் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள ஷெர்மெட்யவோ விமான நிலையத்தில் கடந்த மே மாதம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானமொன்று அவசரமாக தரையிறங்கும்போது தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதன்போது  41 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.