ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி வரும் அவரின் 25ஆவது படமான ‘பூமி’ யின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என வரிசையாக வெற்றி படங்களை அளித்து, தமிழ் திரையுலகில் வசூல் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி, தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜெயம் ரவி, தன்னுடைய 25ஆவது படத்தை எட்டியிருக்கிறார்.அவரது 25ஆவது படமாக ‘பூமி’ தயாராகி வருகிறது. இப்படத்தை ஜெயம் ரவியை வைத்து ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லக்ஷ்மண் இயக்கியிருக்கிறார்.

முன்னணி நடிகர்கள் விவசாயி, விவசாயத்தைப் பற்றி திரையில் பேசுவதை பொதுவெளியில் விமர்சகர்கள் எதிர்மறையான விமர்சனத்தை பதிவு செய்து வரும் வேளையில், ‘பூமி’யின் ஃபர்ஸ்ட் லுக் தோற்றத்தில்,ஜெயம் ரவியின் பார்வை விவசாயத்தையும், விவசாயிகளின் நிலைமையைக்கடந்து இந்த பூமியையும், சுற்றுச்சுசூழலையும் காப்பாற்ற போராடும் இயற்கை போராளிகள் என்ற கோணத்தில் சித்தரித்து இருக்குமோ...! என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக இணையத்தில் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். இதனால்இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

வரிசையாக வெற்றி படங்களை அளித்துவரும் நடிகர் என்பதாலும், 25 ஆவது படம் என்பதாலும், ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு ‘பூமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருப்பதால், அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறார்கள்.