இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது இருபதுக்கு -20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஓட்டங்களினால் வெற்றிபெற்று இலங்கை அணியை வைட் வோஷ் செய்துள்ளது.

ஏற்கனவே 2:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி இன்றைய தினம் மெல்போர்னில் இலங்கை அணியுடனான மூன்றாவதும் தொடரின் இறுதியான போட்டியை எதிர்கொண்டது. 

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து, 142 ஓட்டங்களை குவித்தது.

இதன் பின்னர் 143 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 145 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

ஆர்ரோன் பிஞ்ச் 37 ஓட்டத்தையும், ஸ்டீபன் ஸ்மித் 13 ஓட்டத்தையும், பென் மெக்டெர்மொட் 5 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழக்க டேவிட்  வோர்னர் 57 ஓட்டத்துடனும், டர்னர்  22 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயனாக டேவிட் வோர்னர் தெரிவானார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றி இலங்கை அணியை வைட் வோஷ் செய்தது.