களுவாஞ்சிகுடியில் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு நான்கு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணமும் மூன்று இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி மார்க்கட் வீதியில் அமைந்துள்ள சில்லறைக்கடையொன்றும் கூழ்பார் ஒன்றுமே உடைக்கப்பட்டு இவ்வாறு கொள்ளையிடப்பட்டள்ளது. குறித்த சம்பவமானது நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

மேற்படி கொள்ளைச்சம்பவம்கள் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

வழமை போன்று  இன்று காலை கடை உரிமையாளர்கள் தங்களது கடையினை திறப்பதற்கு வருகை தந்தபோது தங்களது கடைகள் உடைக்கப்பட்டுள்ளதை தெரியவந்ததையடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் சில்லறைக்கடை  உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்

முதலில்  கூழ்பாரின் வெளிக்கதவினை உடைத்து கூழ்பாரினுள் உள்நுழைந்த கொள்ளையர்கள்  நடுச்சுவரினை உடைத்து பக்கத்து கடையான எனது கடைக்குள் உள் நுழைந்தள்ளனர். 

எனது கடையினுள்ள நான்கு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தினை எனது கல்லாப்பெட்டிக்குள் வைத்து சென்றிருந்தேன் அதனையும் கையடக்க தொலைபேசிக்கு பயன்படுத்தும் காட்கள்,மற்றும் சிகரட்கள்,அங்கர் பெட்டிகள் உட்பட சுமார் மூன்று இலட்சம் ரூபாய்க்கு மேற்பட் பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர் என அவர் இதன்போது தெரிவித்தார். கூழ்பாரினுள் ஐஸ்கிறீம் கேக் என்பன எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

மேற்படி இரண்டு கொள்ளைச்சம்பவங்கள்  தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்