எம்மில் பலரும் குறிப்பாக 40 வயதை கடந்தவர்களில் பெரும்பாலனவர்களுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழப்பு நிகழ்கிறது. ஆனால் இத்தகைய திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நான்கு நிமிடத்திற்குள் சிகிச்சை அளித்தால், இவர்களை காப்பாற்ற முடியும். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமற்றது என்பதால், வைத்தியதுறை இதனை தடுப்பதற்கு நவீன கருவி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது.
திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கு இதயத்தை இயங்கச் செய்யும் மின்னோட்டத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளை முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது. ஒருவரது குடும்பத்தில் எவரேனும் திடீர் மாரடைப்பால் மரணமடைந்திருந்தால், அவர்களது உறவினர்களுக்கு இத்தகைய இதய மின்னோட்ட பிரச்சினைகள் இருக்க வாய்ப்புள்ளது.
இதயத்தின் மின்னோட்டம் சீராக இல்லாத பட்சத்தில் அதன் செயற்பாடுகள் முற்றிலும் முடங்கி விடக்கூடும். எதிர்பாராத சூழலில் தோன்றும் மாரடைப்பிற்கு 4 நிமிடங்களுக்குள் சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிரிழப்பை தடுக்க இயலும்.
இந்நிலையில் இத்தகை உயிரிழப்பை தடுக்கும் வகையில் ஐசிடி எனப்படும் Implantable Cardioverter Defibrillator இம்ப்ளான்ட் கார்டியோவெர்டர் டீஃபிப்ரில்டர் என்ற கருவி அறிமுகமாகியிருக்கிறது.
இதயத்திற்கு மேல்புறத்தில், தோல் பகுதிக்கு அடியில் சிறிய அளவிலான சத்திரசிகிச்சை செய்து இந்த கருவியை பொருத்துவதன் மூலம் திடீர் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கலாம். அதே தருணத்தில் இதயத்துடிப்பில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்தக் கருவி இயங்கி இதயத்துடிப்பை சீராக்கி மாரடைப்பைத் தடுக்கும்.
தீவிர மன அழுத்தம், கடுமையான தனிமை போன்றவைகூட இத்தகைய திடீர் மாரடைப்பை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM