சந்திரிகா புதிய கூட்டணியில் இணைந்தமை ஜனநாயக ஆட்சிக்கு முக்கியமானதொரு விடயம் : சஜித்

Published By: R. Kalaichelvan

01 Nov, 2019 | 03:21 PM
image

(நா.தனுஜா)

புதிய ஜனநாயக முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து நாட்டில் ஜனநாயக அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு உறுதியளித்திருப்பது மிக முக்கியமான விடயமாகும்.

நாட்டில் அபிவிருத்தி, சமத்துவம், சுயாதீனத்துவம் என்பவற்றை ஏற்படுத்தி, சௌபாக்கியமானதொரு இலங்கையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு பயணிப்பதே எமது இப்புதிய கூட்டணியின் முக்கிய இலக்கு என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு முழுமையான ஆதரவை வழங்கி, அவரை தேர்தலில் வெற்றி பெறச்செய்வதை நோக்கில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து புரிந்துந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு 'ஜனநாயக தேசிய முன்னணி' என்ற பெயரில் ஒன்றிணையும் நிகழ்வு இன்று காலை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இன்று கைச்சாத்திடப்படும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது நாட்டில் ஜனநாயகம், சமூக சமத்துவம், நியாயாதிக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கிய பயணத்தில் மற்றொரு படியாகும்.

புதிய ஜனநாயக முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து நாட்டில் ஜனநாயக அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு உறுதியளிக்கும் இத்தருணம் மிகவும் முக்கியமானதாகும். நாட்டில் அபிவிருத்தி, சமத்துவம், சுயாதீனத்துவம் என்பவற்றை ஏற்படுத்தி, சௌபாக்கியமானதொரு இலங்கையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு பயணிப்பதே இப்புதிய கூட்டணியின் முக்கிய இலக்காகும்.

மேலும் நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் அதேவேளை, அதன்மூலம் பெறப்படும் வருமானம் மக்கள் மத்தியில் சமனாகப் பகிரப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். சட்டத்தின் கீழ் அனைவரும் ஒரே விதமாக நடத்தப்படுவதுடன், சமுதாய சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் என்பன பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

நாட்டில் அறிவை மையப்படுத்திய பொருளாதாரமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும். அதுமாத்திரமன்றி பாரம்பரிய கைத்தொழில் துறையை நவீன தொழில்நுட்பத்தின் பங்களிப்புடன் வலுப்படுத்த வேண்டும். 

தனியொரு குடும்பமோ அல்லது குறித்தவொரு பிரிவினரோ மாத்திரமன்றி நாட்டு மக்களனைவரும் அனுபவிக்கக்கூடிய விதமாக பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் அடையப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். மக்கள் செலுத்தும் வரியின் ஊடாக அரசிற்குக் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் முதலீடு செய்வதற்கு எதிர்காலத்தில் நான் நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35