அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி 142 ஓட்டங்களை பெற்றுள்ளது.

மெல்போர்னில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.40 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

குசல் மெண்டிஸ் 13 ஓட்டத்துடனும், டிக்வெல்ல டக்கவுட்டுடனும், குசல் பெரேரா 45 பந்துகளை எதிர்கொண்டு 57 ஓட்டத்துடனும், அவிஷ்க பெர்னாண்டோ 20 ஓட்டத்துடனும், ஒசத பெர்னாண்டோ 6 ஓட்டத்துடனும், செஹான் ஜயசூரிய 12 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் பானுக்க ராஜபக்ஷ 17 ஓட்டத்துடனும், லசித் மலிங்க 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டாக், கேன் ரிச்சன்டர்ஷன், பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இலங்கை, அவுஸ்திரேலியா, மெல்போர்ன், srilanka