5 தமிழ்க் கட்சிகளின் 13 கோரிக்கைகளில் ஐ.தே. மு.வின் விஞ்ஞாபனத்தில் 8 கோரிக்கைகள் நிராகரிப்பு - தவராசா

Published By: R. Kalaichelvan

01 Nov, 2019 | 02:21 PM
image

(தி.சோபிதன்)

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் 8 முக்கிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்ப்பாளர் தமிழர்கள் விடயத்தில் என்ன செய்வேன் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னாரோ அதனை குறைவான விடயங்களே உள்ளன என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கடசித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலின் போது அதில் போட்டியிடுவார் தாங்கள் வெற்றி பெற்றதும் தங்களால் முடிந்தவற்றை மட்டுமே கூறவேண்டும்.

குறிப்பாக ஜனாதிபதியால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையே கூற வேண்டும்.ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பாராளுமன்றத்தினால் செய்ய வேண்டிய விடயங்கள்,அமைச்சரவையினால் செய்யப்பட வேண்டிய விடயங்கள் எல்லாவற்றையும் தாம் செய்வேன் எனக் கூறுகின்றார். 

19 ஆவது திருத்த சட்டத்தின் படி இனிவரவுள்ள ஜனாதிபதிக்கு வரையடுக்கப்பட்ட் சில அதிகாரங்கள் மட்டுமே உள்ளன.மிகுதி அதிகாரங்கள் பிரதமருக்கே செல்லும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மிக முக்கியமாக சஜித்தின் தேர்தல் அறிக்கையில் அரச படைகளுக்கு தேவையற்ற காணிகள் விடுவிக்கப்பபிடும் எனக் கூறப்பட்டுள்ளது.அப்படியாயின் காணி விடுவிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது.ஆனால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர கோத்தபாயவின் தேர்தல் அறிக்கையில் அரச,மற்றும் தனியார் காணிகள் இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்வதாக கூறப்பட்டுள்ளது.

இதில் கோத்தாபாய தரப்பினரும் ஏற்கனவே கூறியுள்ளனர்.இன்று கூட தொல்லியல் திணைக்களம் சஜித் பிரேமதாசாவிடம் உள்ளது.வடக்கு கிழக்கில் அந்த திணைக்களத்தினால் அபகரிக்கப் பட்டுள்ள நிலங்களில் சிறிய அளவு கூட விடுவிக்கப்படவில்லை. 

அவரால் அதனை கூட செய்ய முடியவில்லை.இதற்கும் அப்பால் யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியேற்றப்பட்ட் மக்களை அவரது அமைச்சனா தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் நீதிமன்றம் சார்ந்தது என்பதால் அதில் நேரடியாக தலையிடாது வழக்கு தாக்கல் செய்த அதிகார சபையினரை வழக்கினை மீளப் பெற முடியும் அதனை கூட செய்ய துப்பில்லாதவர் தமிழர்களுக்கு தீர்வு தருவாரா?என்பதில் பலத்த சந்தேகம் உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58