யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வெள்ளவத்தை கிளையை 2019 ஒக்டோபர் 24 ஆம் திகதி புதிய முகவரிக்கு இடமாற்றியிருந்தது.

பிரதேசவாசிகளுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நாடு முழுவதிலும் முழுமையாக செயலாற்றக்கூடிய கிளைகளைக் கொண்டிருப்பது எனும் நிறுவனத்தின் இலக்குக்கமைய மெருகேற்றம் செய்யப்பட்ட இந்த புதிய கிளை அமைந்திருக்கும் என்பதுடன், முழு வசதிகளையும் கொண்ட கிளை வலையமைப்புக்கு மேலும் வலிமையூட்டுவதாக அமைந்திருக்கும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் வெள்ளவத்தை அலுவலகம், பெருமளவு வாகன தரிப்பிட வசதிகளைக் கொண்டமைந்துள்ளதுடன் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். 

மெருகேற்றம் செய்யப்பட்ட இந்தக் கிளை, புதிய உள்ளக அம்சங்களையும் ஒளியூட்டல் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளதுடன், ஊழியர்களுக்கு பணியாற்றுவதற்கு சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது. சகல உள்ளக அலுவலக பகுதிகளும் ஓய்வான மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த கட்டமைப்பில் அமைந்துள்ளதுடன் பணியாற்றுவதற்கு உகந்த சூழலாகவும் அமைந்துள்ளது.

ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கான சேவைப் பகுதிகள், ஊழியர்களுக்கான பயிற்சி பகுதிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான இதர பல வசதிகளும் எவ்வேளையிலும் காணப்படுகின்றன. யூனியன் அஷ்யூரன்ஸ் கிளை அலுவலகங்களினூடாக தனிநபர்களுக்கும், வியாபாரங்களுக்கும் பரந்தளவு ஆயுள் காப்புறுதி தீர்வுகள்  வழங்கப்படுகிறது. கிளை அலுவலகம் முழுமையாக தகவல் தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கும் என்பதுடன், பிரத்தியேக நிதி ஆலோசகர்கள் மடிக்கணினிகள் மற்றும் டப்லெட்கள் ஆகியவற்றைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு துரிதமாகவும், களத்திலுள்ள போதே சேவைகளை வழங்குவார்கள்.

யூனியன் அஷ்யூரன்ஸ் அண்மையில் தனது வெள்ளவத்தை அலுவலகத்தை இல. 57/2/1, ஹைலெவல் வீதி, கொழும்பு 06 எனும் முகவரியில் திறந்துள்ளது. நாட்டில் 30 வருட கால சேவையை கொண்டாடும் முதலாவது தனியார் காப்புறுதி சேவை வழங்குநராக திகழ்வதுடன், அனுபவம் வாய்ந்த நிபுணர்களையும், உறுதியான மூலதன இருப்பையும் கொண்டு செயலாற்றி வருகிறது. உயர் தரப்படுத்தல்களைக் கொண்ட சர்வதேச மீள் காப்புறுதிதாரர்களுடன் பங்காண்மைகளை ஏற்படுத்தியுள்ளது. 

நம்பிக்கை எனும் உறுதி மொழிக்கமைய யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமம் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் வெளிப்படையான, சௌகரியமான மற்றும் மதிப்புடன் கூடிய சேவைகளை பங்காளர்களுடன் பேணி வருகிறது.