புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு உயிரூட்டமளிக்கும் Canon EOS 80D

Published By: Priyatharshan

25 May, 2016 | 02:17 PM
image

புதிதாக புகைப்படத்துறையில் உள்நுழையும் புகைப்படவியலாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய EOS 80D digital DSLR கமரா வகையினை அண்மையில் Canon நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. 

புதிதாக மேம்படுத்தப்பட்ட Power Zoom Adapter PZ-E1 உடன் புதிய EF-S18-135mm f/3.5-5.6 IS USM kit lens கொண்ட புகழ்பெற்ற EOS 70 D கமராவிற்கு மாற்றீடாக EOS 80 D கமரா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“EOS 80D கமரா வகைகள் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. இத்தெரிவுகள் எமது காட்சியறையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது” என இலங்கையின் Canon கமராக்கள் மற்றும் lens வகைகளுக்கான ஏக விநியோகஸ்தரான மெட்ரொபொலிடன் ஃபோட்டோஹப் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் சுரேஷ் ஹேரத் தெரிவித்தார்.

Canon இன் மேம்படுத்தப்பட்ட புகைப்பட தொழில்நுட்பம் மற்றும் விசேடமாக விருத்தி செய்யப்பட்ட AF முறைமையானது vivid மற்றும் Full HD 60p திரைப்படங்களை நம்பமுடியாத வகையில் வசதியாக்குகிறது.

Canon இனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட EOS 1D-X Mark II இல் Dual Pixel CMOS AF தொழில்நுட்பம் உள்ளதுடன் பாவனையாளர்கள் vari-angle touch panel இனை அழுத்துவதனூடாக பின்னாலுள்ள பொருளிலிருந்து முன்னால் இருக்கும் பொருளின் மீது ஃபோகஸினை இலகுவாகவும்ரூபவ் விரைவாகவும் மாற்றியமைத்துக் கொள்ளமுடியும். Movie Servo AF Custom Speed மூலமாக பாவனையாளர்கள் 10 வெவ்வேறு படிநிலைகளில் AF வேகத்தை சரிசெய்து கொள்ள முடிவதுடன் சினிமா effects இனை பெற்றுக்கொள்ள படப்பிடிப்பின் போதே வீடியோகிராஃபர்களுக்கு நெகிழ்ச்சி மற்றும் ஆக்கத்திறன் போன்ற வசதிகளை வழங்குகிறது. 

புதிய Creative Filters களான Dream, Memory, Miniature, Old Movies மற்றும் Dramatic B&W போன்றன வீடியோக்களுக்கு புதிய பிம்பத்தை வழங்குகிறது.

EOS 80D இன் அறிமுகத்தோடு இணைந்து புகைப்பட கலைஞர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தக்கூடிய மேலதிக தெரிவாக EF-S18-135mm f/3.5-5.6 IS USM  எனும் lens இனை Canon அறிமுகம் செய்திருந்தது. இந்த லென்ஸ் வகை குறித்த பொருளை பெரிதாக்குவதற்கான நெகிழ்ச்சியை வழங்குவதுடன் புதிய Nano ultrasonic motor(USM) மூலமாக நிழற்படங்கள் மற்றும் திரைப்பட படிப்பிடிப்புகளின் போது அதிவேகம், அமைதி மற்றும் AFஇனை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றன.

EOS 80D இலுள்ள all-cross type 45-point AF முறைமை 24.2-megapixel CMOS sensor உடனான DIGIC 6 image புரொஸசர் மற்றும் 25,600 வரை விரிவாக்கிக்கொள்ளக்கூடிய ISO வேகம் போன்ற அம்சங்கள் புகைப்படத்தின் தரத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக அமைந்துள்ளது.

“EOS 70D கமராவின் வெற்றியைத் தொடர்ந்து புகைப்பட தரத்தின் எல்லைகளை விஞ்சிடுவதில் Canon தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது. புதிய Canon EOS 80D கமரா புகைப்பட கலைஞர்களின் ஆக்கத்திறன் சாத்தியங்களை பலப்படுத்துவதுடன் புகைப்பட திறன்களை மேம்படுத்த விரும்பும் புகைப்பட ஆர்வலர்களின் திறன்கள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது” என Canon சிங்கப்பூர் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் எட்வின் டெஹோ தெரிவித்தார். 

‘புதிய லென்ஸ் all cross-type 45-point AF system மற்றும் 24.2 megapixel CMOS போன்ற அம்சங்களை கொண்ட EOS 80D, ஒவ்வொரு ஃபிரேமிலும் உயர் தரமான மற்றும் தௌ;ளத்தெளிவான புகைப்படத்தை உறுதி செய்கிறது” என்றார்.

Canon இன் மத்திய வகை DSLR களுள் முதல் முறையாக சுமார் 100 வீதமான காட்சி பரப்புடன் அதிதிறன் வாய்ந்த viewfinder  கொண்டதாக புதிய EOS 80D காணப்படுகிறது. 

அதிதிறன்மிக்க viewfinder  ஊடாக பாவனையாளர்கள் AF பகுதிகள் aspect ratio line, மின்னணு நிலை flicker detection போன்ற பயனுள்ள தகவல்களை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். புகைப்பட வரிசைகளை சரிபார்க்கும் திறனுடன், புகைப்பட கலைஞர்கள் புகைப்படத்தின் முனையிலிருக்கும் உத்தேசிக்காத பொருள் குறித்து கவலை கொள்ளாது (பொதுவாக DSLR களில் சிறியளவிலான viewfinder coverage பகுதிகளே காணப்படும் ) தாம் விரும்பிய புகைப்படத்தினை மாத்திரம் ஃபோகஸ் செய்துகொள்ள முடியும்.

EOS 80D கமராக்களில் உள்ள மேம்படுத்தப்பட்ட AF முறைமை மற்றும் புதிய mirror drive mechanism அம்சங்கள் 7fps வரையான தொடர்ச்சியான விரைவான மற்றும் அமைதியான படப்பிடிப்பின் போது அதிர்வையும் shutter சத்தத்தையும் குறைப்பதோடு mirror bounce இனையும் குறைக்கின்றது. இந்த செயல்திறன்கள் கொண்ட DSLR கள் விசேடமாக அமைதி நிலவும் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கும் பொருத்தமானதாக அமையும்.

EOS 80D இலுள்ள புதிய 24.2-megapixel CMOS sensor கள் புகைப்படங்களுக்கு அதியுயர் resolutions இனை வழங்குகிறது. 

வேகமான மற்றும் சக்திமிக்க DIGIC 6மேஜ் புரொஸசர்கள் மற்றும் 16,000 வரையான ISO வேகம் (25,600 வரை விரிவாக்க முடியும் அல்லது திரைப்படங்களுக்கு 12,800) போன்ற அம்சங்கள் மூலமாக பயனர்கள் ப்ளாஷ்கள் பயன்படுத்த முடியாத குறிப்பாக இரவு நேர படப்பிடிப்பு, வனவியல் விளையாட்டு அல்லது உள்ளக காட்சிகளின் போது தரமான புகைப்படங்களை படம் பிடித்துக்கொள்ள முடியும். EOS Scene Analysis இலுள்ள 7,560-pixel RGB + IR metering sensor ஆனது கண்களுக்கு புலப்படாத உயர் அதிர்வெண் கொண்ட ஒளிச்சிமிட்டல்களையும் படம்பிடிக்கிறது.

செயற்கை லைட்டிங்கின் கீழ் இடம்பெறும் படப்பிடிப்பின் போது anti-flicker mode ஆனது பாவனையாளருக்கு ஒழுங்கற்ற exposure மற்றும் வர்ணங்களை குறைத்து தாம் எடுக்கும் புகைப்படங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதை வசதியாக்குகிறது.

புதிய வர்ண கண்காணிப்பு அம்சத்தின் மூலமாக மனிதர்களை ஃபோகஸ் செய்யும் போது சரும நிறத்தினை கண்டறிந்து AF புள்ளிகளை கண்டறிய முற்படுகிறது. போர்ட்ரெய்ட்டுகளை எடுக்கும் போது முகம் மற்றும் முக பாவனைகள் மீது ஃபோகஸ் செய்து தன்னியக்க exposure களின் துல்லியத்தை மேம்படுத்துவதாக இது அமைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58