போதைப்பொருள் கடத்தல் காரரான கஞ்சிப்பானை இம்ரான்  விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கெசல்வத்த பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரான் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான்  முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.