சவுதியில் நடைபெற்ற பெண்கள் பங்கேற்கும் முதல் மல்யுத்தப் போட்டி

Published By: Vishnu

01 Nov, 2019 | 11:31 AM
image

சவுதி அரேபியாவில் முதன் முறையான பெண்களுக்கான முதல் மல்யுத்தப் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது.

அடக்குமுறைக்கு பெயர் போன நாடு என்ற பிம்பத்தை உடைக்க, பல்வேறு சீர்திருத்தங்களை சவுதி அரேபியா தற்போது மேற்கொண்டு வருகிறது.

நீண்ட காலமாக பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி இல்லாமல் இருக்க, இதற்கு 2018 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. 

அதேபோல ஆண்களின் அனுமதியின்றி பெண்கள் கடவுச்சீட்டு பெறவும், ஆண் துணை இல்லாமல் தனியாகப் பயணம் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந் நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் 'WWE'  நட்சத்திரங்களான நடால்யா மற்றும் லேசி இவான்ஸ் ஆகியோர் மோதினர். இப் போட்டியில் நடால்யா வெற்றிபெற்றார்.

இந் நிலையில் இப் போட்டி குறித்து கருத்து தெரிவித்த சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த 'WWE'  வீரர் மன்சூர், 

என் வீட்டில் உள்ள பெண்கள் இந்தப் போட்டியைக் காண மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர். நேரடியாக போட்டியை பார்ப்பதில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் சகோதரிகளுக்கு மல்யுத்தம் என்றால் மிகவும் பிடிக்கும். என் சகோதரியின் மகளுக்கு தாம் ஒரு மல்யுத்த வீராங்கனையாக வரவேண்டும் என்பதே ஆசை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

LPLஇல் நான்காவது தடவையாக முடிசூடா மன்னனானது...

2024-07-22 00:12:05
news-image

ஜெவ்னா கிங்ஸ் நான்காவது தடவையாக சம்பியனானது

2024-07-22 01:29:19
news-image

வடக்கும் தெற்கும் மோதும் லங்கா பிறீமியர்...

2024-07-21 15:57:37
news-image

இந்தியாவுக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடர்;...

2024-07-21 11:48:02
news-image

கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய 2ஆவது தகுதிகாணில்...

2024-07-20 23:50:06
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணத்தில் விஷ்மி...

2024-07-20 22:36:30
news-image

20 வயதின் கீழ் மகளிர் மத்திய...

2024-07-20 11:44:10
news-image

இலங்கையுடனான 2ஆவது இளையோர் டெஸ்டில் இன்னிங்ஸால்...

2024-07-20 10:59:00
news-image

யாழ். மெய்வல்லுநர்கள் இருவர் உட்பட 10...

2024-07-20 01:04:53
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-07-19 20:45:59
news-image

அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ...

2024-07-19 16:06:50
news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு...

2024-07-19 14:47:26