வட, கிழக்கு வாழ் தமி­ழர்கள் மீண்டும் வர­லாற்றுத் தவறை செய்து விடக் கூடாது. 2005ஆம்  ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலை அவர்கள் புறக்­க­ணித்­ததால் தமி­ழர்கள் பாரிய இழப்­பு­க­ளையும் பல்­வேறு துன்­பத்­துக்கும் உள்­ளா­னார்கள். எனவே இந்தத் தேர்­தலில் அவர்­க­ளுக்­கான தீர்வை பெற்றுக் கொடுக்கக் கூடி­ய­வரும், கீழ்­மட்ட மக்­களின் வாழ்க்­கையை நன்­கு­ணர்ந்­த­வ­ரு­மான ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு வாக்­க­ளிக்க  வேண்டும் என மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிரதித் தலை­வரும், விசேட பிர­தே­சங்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

அண்­மையில் மலை­யக மக்கள் முன்­னணி மற்றும் மலை­யக தொழி­லாளர் முன்­னணி ஆகி­யன ஏற்­பாடு செய்த தேர்தல் கலந்­து­ரை­யா­டலின் பின்பு அட்­டனில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ் ­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு  மேலும் தெரி­வித்­த­தா­வது,

கடந்த காலங்­களில் வைத்­தி­யர்­களால் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த வேலை நிறுத்தம் திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் அர­சியல் நோக்­கத்தைக் கொண்­ட­தாக இருந்­தி­ருக்­கின்­றது. அதற்கு சிறந்த உதா­ரணம் அரச மருத்­துவ சங்­கத்தின் உறுப்­பி­னர்கள் கோத்தபாய ராஜ­ப­க் ஷவின் தேர்தல் விஞ்­ஞா­பன வெளி­யீட்டு மேடையில் வீற்­றி­ருந்­தது. இது ஓர் அர­சியல் போராட்டம் என்­பதை உணர முடி­கின்­றது.

மக்­களின் உயிர்­களைப் பணயம் வைத்து இவ்­வாறு நடந்து கொள்­வது உண்­மை­யான போராட்­டங்­களை இழி­வு­ப­டுத்தும் ஒரு செய­லா­கவே கருத வேண்­டி­யி­ருக்­கின்­றது. எனவே இதனை பொது­மக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக இலங்­கையில் கீழ்­மட்ட மக்­களின் வாழ்க்கைத் தரத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு ஜனா­தி­பதி உரு­வா­க­வில்லை என்றே கூற வேண் டும். அந்த அடிப்­ப­டையில் நீண்ட காலத்­துக்குப் பின்பு ஐக்­கிய தேசிய கட்­சியின் ஒரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தாச போட்­டி­யி­டு­வது ஐக்­கிய தேசிய கட்சி ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் ஓர் உத்­வே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஐக்­கிய தேசிய கட்சி வெற்­றியின் விளிம்பில் இருக்கும் இந்த நேரத்தில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கினால் சஜித் வெற்றி உறுதி செய்­யப்­படும். அந்த முடிவும் வெகு­ வி­ரைவில் வெளி­வரும் என நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம்.

மலை­யக இளை­ஞர், யுவ­தி­க­ளுக்கு எதிர்­வரும் நவம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிக்க வெளி ­மா­வட்­டங்­களில் தொழில் புரிகின்றவர்களுக்கு தங்களுடைய இடங்களுக்குச் சென்று வாக்களிப்பதற்குத் தேவையான விடுமுறைகளை பெற்றுக் கொடுக்க தேர்தல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் அவரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.