இலங்கை அரச நிர்­வாக சேவை போட்டிப் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்ள பரீட்­சார்த்­தி­க­ளுக்கு வழி­காட்டும் வகையில் மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்றம் 'வீர­கே­சரி' நிறு­வ­னத்­துடன் இணைந்து நடத்தும் வதி­விட வச­தி­யுடன் கூடிய இல­வச மூன்றாம் கட்டப் பயிற்சிப் பட்­டறை நாளை 2ஆம் திகதி சனிக்­கி­ழமை அட்டன் சீடா கல்வி அபி­வி­ருத்தி நிலை­யத்தில் ஆரம்­ப­மாகி 3, 4ஆம்  திகதி வரை நடை­பெ­ற­வுள்­ள­தாக மலையகக் கல்வி அபி­வி­ருத்தி மன்­றத்தின் உப த­லைவர் ஏ.எஸ்.ஞானம் தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி பரீட்­சைக்கு நுவ­ரெ­லியா மாவட்­டத்­தி­லி­ருந்து பெரும்­பா­லானோர் தோற்­ற­வுள்­ளதால் அவர்­க­ளுக்கு வழி­காட்டி ஆலோ­சனை வழங்கி உதவும் வகையில் கடந்த மாதம் முதலாம், இரண்டாம்  கட்ட  இல­வச பயிற்சிப் பட்­டறை அட்டன் 'சீடா' கல்வி அபி­வி­ருத்தி வள நிலை­யத்தில் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. 

இவற்றில்  65 பேர் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர். அதன் தொடர்ச்­சி­யாக மூன்றாம் கட்ட செய­ல­மர்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.   பொது உளச்­சார்பு, பொது அறிவு, ஆக்­க­பூர்­வ­மான பங்­கு­பற்­றலும் தொடர்­பாடல் திறன்­களும் ஆகிய மூன்று பாடங்­களில் செய­ல­மர்வு இடம்­பெ­ற­வுள்­ளது. 

இலங்கை திறந்த பல்­கலைக்கழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஏ.எஸ்.சந்­தி­ரபோஸ், பேரா­தனைப் பல்­கலைக் கழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ ரை­யாளர் கலா­நிதி இரா. ரமேஷ் ஆகி­யோரின் வழி­காட்­டலில் என். கஜேந்­தி­ர­ குமார் ஒருங்­கி­ணைப்­புக்­கான ஏற்­பா­டு­களை மேற்கொண்­டுள்ளார்.

பயிற்சிப் பட்­ட­றை யின் இரண்டாம் நாளான ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று கண்டி இந்­திய உதவித் தூதுவர் திரேந்­தி­ரசிங், அட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் மற்றும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் போஷகர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.