ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சற்றுமுன் கைச்சாத்திட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்   ஆலோசகரும்  முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா  பண்டாரநாயக்க  குமாரதுங்க கட்சியில் உள்ள  தனது நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களுடன் புதிய  ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி  வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்த நிலையிலேயே குறித்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையிலேயே இன்றைய தினம்  சந்திரிக்கா குமாரதுங்க தரப்பினர் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலான உடன்படிக்கையானது கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.