வாக்களிக்க ஆசிரியர்களை ஏற்றி சென்ற பஸ் மீது தாக்குதல்

Published By: Digital Desk 4

31 Oct, 2019 | 09:07 PM
image

இன்றைய தினம் அரசு ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பில் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலையில் இருந்து நுவரெலியா வலயக்கல்வி காரியாலயத்திற்கு தபால்மூல வாக்களிப்பிற்கான ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று லிந்துலை பகுதியில் வைத்து இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது . 

இச்சம்பவமானது இன்று பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது . தலவாக்கலை நுவரெலியா A7  பிரதான வீதியின் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை பிரதேசத்தில் அமைந்துள்ள சமூர்த்தி வங்கிக்கு அருகாமையிலேயே குறித்த தனியார் பஸ் கல் வீச்சிக்குள்ளானது. 

 இதில் பயணித்த எவருக்கும் எவ்விதமான காயங்களும் ஏற்படாத போதிலும் பஸ்ஸின் கண்ணாடி பகுதி அளவில் சேதம் அடைந்ததாக அதன் சாரதி தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பாக தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது . 


அத்தோடு இச்சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிசாரிடம் சம்பந்தப்பட்ட பஸ் சாரதி அல்லது நடத்துனரும் அத்தருணத்தில் முறைப்பாடு செய்யாத போதிலும் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர். 

இதன்போது குறித்த பஸ் வண்டியில் 35 ஆசிரியர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57