(எம்.மனோசித்ரா)

சாதாரண பொது மக்கள் மாத்திரமின்றி அரச அதிகாரிகள், ஆளுனர்கள் மற்றும் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் சிலர் தேர்தல் சட்டங்களை மீறி செயற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 

இராஜகிரியவில் உள்ள சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.