(செ.தேன்மொழி)

இங்கிரிய பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான தயாரித்தலுக்குப் பயன்படுத்தும் மூலப்பொருட்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிரிய - கொட்டிகல பகுதியில் நேற்று புதன்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கொட்டிகல - ஹந்தபான்கொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 67 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் மதுபானமும் , 10 இலட்சத்து 85 ஆயிரத்து 625 மில்லி லீற்றர் கோடாவும் (மூலப்பொருள்) கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.