(செ.தேன்மொழி)

பொலிஸ் அத்தியட்சகர்கள் 102 பேர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவிவுயர்த்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் இந்த பதவிவுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை தேசிய தேர்தல் ஆணைக்குழு அங்கிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பதவிவுயர்வு வழங்கப்பட்ட அதிகாரிகளில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகரவும் அடங்குகின்றார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இம்முறை பெண் பொலிஸ் அதிகாரியொருவரும் அடங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்நிலையில் பொலிஸ் அத்தியட்சகர்கள் 87 பேருக்கும் , பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அத்தியட்சகர்கள் 14 பேருக்குமே இவ்வாறு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

அதேவேளை கடந்த மாதமும் சுமார் 3400 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பதவிவுயர்வு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.