(எம்.மனோசித்ரா)

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான மூன்று அளவிலான மாதிரி வாக்குப்பெட்டிகளை சற்றுமுன்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிமுகப்படுத்தி விளக்கினார்.

இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவு நவம்பர் 18 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.