பெருந்­தோட்டப் பகு­தியில் இயற்கை அனார்த்­ததால் பாதிப்­புக்கள் ஏற்­படும் பொழுது அர­சாங்­கத்தால் வழங்­கப்­படும் நிவா­ர­ணங்கள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு கிடைப்­ப­தில்­லை­யென பாதிக்­கப்­பட்ட மக்கள்  கவலை தெரி­விக்­கின்­றனர். ஏனைய நகர கிராம பகு­தி­களில் பாதிப்­புகள் ஏற்­படும் பொழுது அர­சாங்­கத்தால் வழங்­கப்­படும் நிவா­ர­ணங்கள் பெருந்­தோட்ட மக்­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்டும் என பாதிக்­கப்­பட்ட மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

பெருந்­தோட்ட மக்கள்  ஏனைய சமூ­கத்­தி­னரை விட பொரு­ளா­தார வளர்ச்­சியில் பின்­ன­டைந்­த­வர்­க­ளா­கவே வாழ்ந்து வரு­கின்­றனர்.   குடும்ப  வரு­மா­னத்தை  அதி­கரித்துக் கொள்ள  மாற்று திட்­டங்­களும் இல்லை. பெரும் கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் மாத வரு­மா­ன­மாக 5000 ரூபா தொடக்கம் 10 ஆயிரம் ரூபா வரை­யி­லேயே பெற்­றுக்­கொள்­கின்­றனர்.

மேலும் கால­நிலை மாற்­றங்­களால் ஏற்­படக் கூடிய சவால்­க­ளுக்கும் முகம்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது. வெள்ள அனர்த்­தத்தால் விவ­சாய நிலங்­களும் அழிந்­துள்­ளன. இவ்­வா­றான நிலையில் அர­சாங்­கத்தால் வழங்­கப்­படும் நிவா­ர­ணங்­களும் கிடைக்­கப்­பெ­று­வ­தில்லை. பாதிக்­கப்­பட்ட நிலங்கள் தொடர்பில் ஆரா­யப்­ப­டவே கிராம சேவகர் பிரிவில்  விவ­சாய சங்­கங்கள்  ஆரம்­பிக்­கப்­பட்­டன. இருப்­பினும் அவற்றின் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக இல்லை.

இதே­வேளை ஏனைய மாவட்­டங்­க­ளி­லுள்ள விவ­சாய சங்­கங்­களின் அதி­கா­ரிகள் அனர்த்தம் இடம்­பெற்ற இடங்­க­ளுக்கு நேர­டி­யாக விஜயம் மேற்­கொண்டு தேவை­யான ஆலோ­ச­னைகள் மற்றும் நிவா­ரண உத­வி­களை வழங்­கு­கின்­றனர்.மேலும் மானிய விலையில் உரம்,மருந்துகளையும் வழங்குகின்றனர். ஆனால் தோட்டப்புற மக்களுக்கு இவ்வாறான உதவிகள் கிடைக்கப்பெறுவதில் பாரபட்சத்துடன் அதிகாரிகள் செயற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.