டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் அனைத்துவிதமான அரசியல் விளம்பரங்களையும் தடை செய்யவுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி  ஜாக் டோர்சி தனது டுவிட்டர் கணக்கு வழியாக டுவிட்டரின் புதிய கொள்கையை அறிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த புதிய கொள்கை நவம்பர் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது, இது உலகளவில் அனைத்து தேர்தல் விளம்பரங்களுக்கும், அரசியல் பிரச்சினைகள் தொடர்பான விளம்பரங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது அரசியல்வாதிகள் தவறான அறிக்கைகளை விளம்பரப்படுத்த அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய நிலைப்பாடு குறித்து பேஸ்புக்கில் அழுத்தத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

குறித்த தடை பற்றிய செய்தி எதிர்வரும் 2020 இல் இடம்பெறவுள்ள அமெரிக்க தேர்தலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சார அதிகாரி பிராட் பார்ஸ்கேல், இந்த தடை "ட்ரம்பையும் பழமைவாதிகளையும் அடக்குவதற்கான இடதுசாரிகளின் மற்றொரு முயற்சி" என கூறியுள்ளார்.

ஆனால் ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் ஜோ பைடனின் பிரச்சார செய்தித் தொடர்பாளர் பில் ருஸ்ஸோ தெரிவிக்கும் போது, "விளம்பர டொலர்களுக்கும் நமது ஜனநாயகத்தின் ஒருமைப்பாட்டிற்கும் இடையில் ஒரு தேர்வை எதிர்கொள்ளும்போது, ஒரு முறை வருவாய் வெல்லவில்லை என்பது ஊக்கமளிக்கிறது." என எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த கொள்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளதால் இலங்கையில் ஜனாதிபதித் தேர்லில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.