சீரற்ற கால­நி­லையால் இரு வாரங்­களில் 9 பேர் பலி : 51 ஆயிரம் பேர் பாதிப்பு : ரூ.8 மில்­லியன் நிதி ஒதுக்­கீடு

31 Oct, 2019 | 11:53 AM
image

(எம்.மனோ­சித்ரா)

நாட்டில் கடந்த இரு வாரங்­க­ளாக நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக இதுவரையில் 9 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு, 21 மாவட்­டங்­களைச் சேர்ந்த 51 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நிவா­ர­ணங்கள் மற்றும் சேத­ம­டைந்­துள்ள வீடு­களின் நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்­காக அர­சாங்­கத்தால் 8 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

சீரற்ற காலநிலையால் ஏற்­படக் கூடிய அனர்த்­தங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்கக் கூடிய  வகையில் அனைத்து ஏற்­பா­டு­களும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சினால் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன. 25 மாவட்­டங்­க­ளிலும் முப்­ப­டை­யி­னரை உள்­ள­டக்­கிய அவ­சர அனர்த்த முகா­மைத்­துவக் குழு பணிக்­க­மர்த்­தப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சில் நேற்றுப் புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அனர்த்த நிவா­ரண சேவைகள் பிரிவின் மூலம் புன­ர­மைப்பு நட­வ­டிக்­கைகளை மேற் ­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அமைச்சர் மேலும் தெரி­வித்தார்.

கால­நிலை

இதன்போது கால­நிலை அவ­தான நிலைய எதிர்வுகூறல் பிரிவின் பணிப்­பாளர் அனோஷ வர்­ண­கு­ல­சூ­ரிய தெரி­விக்­கையில்,

கடந்த சில தினங்­க­ளாக தெற்­கி­லேயே அதிக மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. எதிர்­வரும் தினங்­களில் வடக்கு மாகா­ணத்தில் கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம் உள்­ளிட்ட மாவட்­டங்­களில் மழை வீழ்ச்சி அதி­க­ரிக்கக் கூடும். மேலும் அநு­ரா­த­புரம், புத்­தளம் ஆகிய மாவட்­டங்­களில் 100 மில்லி மீற்­றரை விட அதி­க­ரித்த மழை வீழ்ச்சி பதி­வாகக் கூடும். எனினும் இன்­றி­லி­ருந்து தெற்கில் மழை வீழ்ச்சி குறை­வ­டை­வ­தற்­கான வாய்ப்­புகள் இருக்­கின்­றன.

தற்­போ­துள்ள நிலை­வ­ரத்­தி­ன் அ­டிப்­ப­டை யில் தேர்தல் காலத்தில் அடை மழை பெய்­வ­தற்­கான வாய்ப்­புகள் குறைவு. எனினும் பிற்­பகல் 2 மணிக்குப் பின்னர் மழை­யு­ட­னான கால­நிலை நீடிக்­கலாம்.

நவம்பர் மாதம் 4ஆம் திக­திக்குப் பின்னர் மழை­யு­ட­னான கால­நிலை குறை­வ­டையக் கூடும். கால­நி­லை­யா­னது 24 மணித்­தி­யா­லங்­க­ளிலும் மாற்­ற­ம­டை­யலாம். எனவே தேர்தல் காலத்தில் எவ்­வா­றான கால­நிலை நிலவும் என தற்­போது உறு­தி­யாகக் கூற முடி­யாது.

கங்­கை­களின் நீர்­மட்டம்

கங்­கை­களின் நீர் மட்­டத்தை அவ­தா­னிக்கும் போது நில்­வள கங்­கையின் நீர்­மட்டம் மாத்­தி­ரமே அதி­க­ரித்த போக்­கைக் காண்­பிக்­கி­றது(நேற்றுப் புதன்­கி­ழமை மாலை வரை). அம்­பாந்­தோட்டை, அநு­ரா­த­புரம், பதுளை, குரு­ணாகல் ஆகிய மாவட்­டங்­களிலுள்ள சில ஆறு­களின் நீர் மட்டம் அதி­க­ரித்­துள்­ளது.

மண்­ச­ரிவு

பதுளை, இரத்­தி­ன­புரி, நுவ­ரெ­லியா, மாத்­தறை மற்றும் களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இம் மாவட்­டங்­களில் மணி சரிவின் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட 30 குடும்­பங்கள் தற்­கா­லி­க­மாக பாது­காப்­பான முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

நிவா­ரணம்  

தேசிய அனர்த்த நிவா­ரண மத்­தி­ய ­நி­லை­யத்தின் பணிப்­பாளர் சமிந்த பதி­ராஜ தெரி­விக்­கையில்,

இம்­மாதம் 10ஆம் திகதி முதல் நாட்டில் நிலவும் வெள்ளம், அடை மழை, பலத்த காற்று மற்றும் மண் சரி­வால் 21 மாவட்­டங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இம் மாவட்­டங்­களில் 13,135 குடும்­பங்­களைச் சேர்ந்த 51 ஆயி­ரத்து 783 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­தோடு இது வரையில் 9 உயி­ரி­ழப்­புகள் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன. மேலும் 20 வீடுகள் முற்­றா­கவும், 1193 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன.

9101 பேர் 30 தற்­கா­லிக முகாம்­களில் தங்­கி­யுள்­ளனர். இவர்­களில் புத்­தளம் மாவட்­டத்­தி­லேயே அதி­க­ள­வான மக்கள் தற்­கா­லிக முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நிவா­ரணம் வழங்கும் பணிகள் மாவட்ட மற்றும் பிர­தேச செய­ல­கங்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. கம்­பஹா, புத்­தளம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு அவ­சர நிவா­ரணம் அல்­லது உத­வி­களை வழங்­கு­வ­தற்­காக 3.8 மில்­லியன் ரூபா நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

குரு­ணாகல், புத்­தளம், களுத்­துறை, மாத்­தறை, கண்டி மற்றும் காலி ஆகிய மாவட்­டங்­களில் சேத­ம­டைந்த வீடு­களைப் புன­ர­மைப்­ப­தற்­காக ரூ. 5.2 மில்­லியன் நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

சுகா­தார ஏற்­பா­டுகள்

சுகா­தார அமைச்சின் அனர்த்த முகா­மைத்­துவ சுகா­தா­ரப்­ பி­ரிவின் சிரேஷ்ட வைத்­தியர் எச்.டி.பி.ஹேரத் தெரி­விக்­கையில்,

சீரற்ற கால­நிலை மற்றும் அதனால் ஏற்­பட்­டுள்ள அனர்த்­தங்­களால் ஏற்­படும் சுகா­தார பாதிப்­புகள் குறித்து மாவட்ட, பிர­தேச சுகா­தார பணிப்­பா­ளர்­களால் மருத்­துவ நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் எந்த மாவட்­டத்­திலும் இது வரையில் பாரி­ய­ள­வி­லான சுகா­தாரப் பிரச்­சி­னைகள் எவையும் பதி­வா­க­வில்லை. எம்மால் இனங்­கா­ணப்­ப­டாமல் ஏதேனும் பாதிப்­புகள் இருந்தால் 117 என்ற எமது அவ­சர தொலை­பேசி இலக்­கத்­துக்கு தொடர்­பை மேற்­கொண்டு தெரி­விக்க முடியும்.

அத்­தோடு தற்­போது டெங்கு நோய் பர­வலும் அதி­க­ரித்து வரு­கி­றது. எனவே டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்­தி­ருக்க வேண்டாம் என்று மக்களிடம் கோருகின்றோம். சிறியளவில் சுகவீனம் ஏற்பட்டாலும் வைத்தியசாலை சென்று உரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

தேர்தலின் போது

தேர்தலின் போது எதிர்பாராத விதமாக மக்கள் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்திருக்கிறது. அதற்கமைய வாக்களிப்பு நிலையங்கள் வெள்ளம் அல்லது ஏதேனுமோர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டால் அதற்கான முன்னாயத் தங்கள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49
news-image

யாழ். புதிய பஸ் நிலைய போக்குவரத்து...

2024-03-01 19:05:59