அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பக்தாதி மீது நடத்திய தாக்குதல் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பென்டகன் வெளியிட்டுள்ளது.

சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமெரிக்காவின் விசேட படையணியொன்று மேற்கொண்ட தாக்குதலில் ஐ . எஸ் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டார்.

இதனை அமெரிக்காவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளதுடன் மரபணு பரிசோதனை முடிவடைந்த பின்னரே இறுதி அறிவிப்பு வெளியானது.

அமெரிக்க படையினருடன் கொண்டு செல்லப்பட்ட நாய்களால் துரத்தப்பட்ட அல் பக்தாதி,  அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில் தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துஉடல் சிதறி உயிரிழந்தார்.

இந்நிலையில் அல்பக்தாதி மறைந்து இருந்த இடத்ததை சுற்றி வளைத்த படையினர் அங்கு மேற்கொண்ட தாக்தல்களை  அல் பாக்தாதி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான காணொளிகள் ,  புகைப்படங்களை பென்டகன் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.