தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இறுதி நேரத்தில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதைக் கூறுவார்கள் தற்போது கூறினால் மக்கள் கேள்வி கேட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தினால் தான் அவர்கள் இதனைச் செய்கின்றார்கள் என வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பாசையூர் மீன்பிடித் துறைமுகப் பகுதி மக்களை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

தமிழ் மக்கள் மத்தியில் வந்து சஜித்துக்கு ஆதரவளிக்க கோர முடியாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதன் காரணத்தினாலேயே அவர்கள் தற்போது தமது முடிவினை அறிவிக்காது மௌனமாக இருந்து வருகின்றார்கள். சில வேளைகளில் இறுதி நேரத்தில் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவினை வழங்குவதாக அறிவிப்பார்கள்.. 

அதனை தமிழ் மக்கள் நம்பி ஏமாறவேண்டாம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ காலத்தில் தான் பல்வேறு வகையான அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றது. அதற்கு பின்னர் எத்தகைய அபிவிருத்திகளும் முறையாக இடம்பெறவில்லை இதனை நான் சொல்லித்தான் நீங்கள் கேட்கவேண்டும் என்று இல்லை நீங்களாகவே இதனைப் பார்க்கமுடியும் 

அடுத்த ஐந்து வருடத்தில் எத்தகைய வேலைத்திட்டங்கள் செய்யவேண்டும் எவ்வாறு வடக்கை முன்னேற்றவேண்டும் என்பதில் பொதுஜனப் பெரமுனவே தீர்மானிக்கவேண்டும். தேர்தலில் நீங்கள் அனைவரும் சென்று மெட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும் என்றார்.