தமிழ்க்கட்சிகளின் முடிவுகளை அடையும்வரை எமது முயற்சிகள் தொடரும் ; மாவை 

Published By: Digital Desk 4

31 Oct, 2019 | 10:21 AM
image

 பல்கலைக்கழக மாணவர்களுடன் தமிழ்க்கட்சிகளும் இணைந்து எடுத்த முடிவுகளை அடையும்வரை நாங்கள் முயற்சிகளை தொடர்ந்து செய்வோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுடன் தமிழ்க்கட்சிகளும் இணைந்து முடிவு எடுக்கப்படாமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் மிகவும் நிதானத்துடனும் பொறுப்புடனும் தீர்வை ஆராய்ந்து முடிவுகளை அறிவிக்கவேண்டும் தனியே அறிக்கை விடுவது முறையல்ல நிதானம் தேவை பல்கலைக்கழக மாணவர்களுடன் தமிழ்க்கட்சிகளும் இணைந்து எடுக்கப்பட்ட கோரிக்கைகள் நியாயபூர்வமானவை அவை அனைத்தும் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கு உட்பட்டவை

ஒருமித்து செயற்படவேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சியை செய்து ஆறு கட்சிகளும் ஒன்றினைந்து கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் ஒரு கட்சி வெளியேறியது எனினும் 5 கட்சிகளும் 13 கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. 

இவை நியாயபூர்வமானவை. ஜனாதிபதிவேட்பாளர்களிடம் இதனை நாம் முறைப்படி முன்வைப்போம் யார் ஜனாதிபதியாக வந்தாலும் அந்தக் கோரிக்கைகளை அடையும்வரை நாம் பல முயற்சி செய்துகொண்டேயிருப்போம். மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பில் நாம் மிகவும் நிதானத்துடனும் பொறுப்புடனும் தீர்வை ஆராய்ந்து முடிவை அறிவிப்போம். அவசரப்பட்டு தன்னிச்சையான ஒரு முடிவை அறிவிக்கமாட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14