கிளிநொச்சி தேராவில்  துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்விற்கான ஆரம்பக் கட்ட  துப்புரவு செய்யும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்விற்கான ஆரம்பக் கட்ட துயிலுமில்லங்களின் துப்புரவு செய்யும் பணிகள் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்றது.

 முதற்கட்டமாக தேராவில் துயிலுமில்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

எதிர்வரும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் சகலதும் பூர்த்தியாகியுள்ளது எனவும்  விரைவில் மாவீரர் பெற்றோர் மற்றும் உறவுகளை ஒருங்கிணைத்து மாபெரும் சிரமதானப் பணி விரைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

 

அத்துடன் துப்பரவுப் பணியில் ஈடுபட்ட பணிக் குழு உறுப்பினர்களது பெயர் மற்றும்  விபரங்களை இராணுவத்தினர் பதிந்ததன் பின்னரே துப்புரவுப் பணிக்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.