அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஹலோவீன் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற விருந்தில்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் கலிபோர்னியாவின் லொங் பீச் நகரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நேரப்படி இரவு 10.45 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய 3 ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 9 பேரில் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதன்போது சுமார் 20 - 30 தடைவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாக செய்திகள்  தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம்  தொடர்பான தீவிர விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.