போரில் பாதிக்கபட்ட குடும்ப உறுப்பினர் என்ற ரீதியில் உங்களின் கவலைகள், கஸ்டங்கள், துயரங்கள் என்பவற்றை நான் அறிந்து கொண்டவனாக இருக்கிறேன். எனவே உங்களது கவலை கஸ்டங்களை தீர்த்து உங்களது வாழ்வை வளமிக்கதாக மாற்றுவதில் எப்பொழுதும் பின்னிற்க போவதில்லை. என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். வவுனியா பிரதேசத்திலே வாழும் அனைத்து மக்களிற்கும் ஒரு விடயத்தை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் உருவாக்கி தருவதற்கு நான் உங்களிடத்தில் உறுதி பூணுகின்றேன். இங்கு போரால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் இருக்கிறார்கள்.
நானும் போரால் பாதிக்கபட்ட குடும்ப உறுப்பினர்களில் ஒருவனாக இருக்கிறேன். போரால் பொதுமக்கள், இராணுவ வீரர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். பாதிக்கபட்ட உங்களின் கவலைகள், கஸ்டங்கள், துயரங்கள் என்பவற்றை நான் அறிந்து கொண்டவனாக இருக்கிறேன்.எனவே சஜித் பிரேமதாச ஆகிய நான் உங்களது கவலை கஸ்டங்களை தீர்த்து வளமிக்கதாக மாற்றுவதில் எப்பொழுதும் பின்னிற்க போவதில்லை. என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.
உலக நாடுகளில் போருக்கு பின்னர் சமாதானம் வந்ததும், சர்வதேச ஆதரவாளர்களை அழைத்து சர்வதேச மற்றும் உள்ளக விடயங்கள் தொடர்பாக ஆராய்கின்றனர். உகண்டா போன்ற பல்வேறு நாடுகளில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன.
எமது ஆட்சி வந்ததும் சர்வதேச பிரதிநிதிகளை அழைத்து வடக்கு, கிழக்கு பகுதிகளிலே தனித்தனியாக நிகழ்வுகளை நடாத்தி, சர்வதேச ஆய்வுமையங்களை ஏற்படுத்தி அபிவிருத்தியின் கேந்திர நிலையமாக இந்த பிரதேசத்தை மாற்றியமைப்பேன்.
இந்த நாட்டில் தேர்தல் முடிந்த பின்னர் வாக்களிக்கும் மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலைமை வழமையாகியுள்ளது. ஆனால் என்னுடைய ஆட்சியில் இது ஒழிக்கபடும்.நாட்டில் உள்ள 332 பிரதேச செயலகங்களிலும் ஜனாதிபதி மையம் ஒன்று உருவாக்கப்படும்.இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் விதமான நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி தருவேன் என்று உறுதி பூணுகின்றேன்.
இன மத பேதங்களை கடந்து உங்களுடைய பாதுகாப்பு எனது ஆட்சியில் உறுதிப்படுத்தப்படும். இப்பகுதியில் உள்ள சிறிய மற்றும் பாரிய நீர்த்தேங்கங்கள் புனரமைக்கபட்டு விவசாய உற்பத்தியை அதிகரித்து, உணவு உற்பத்தியை பெருக்குவேன். கிராமந்தோறும் உணவு உற்பத்தி அதிகரிக்கப்படும் போது தேசிய உற்பத்தி அதிகரிக்கும். அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கும். அந்த அதிகரிப்பின் மூலம் மகிந்த அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளபட்ட கடன்களை திருப்பிச்செலுத்தும் நடவடிக்கையை நாம் முன்னெடுப்பதுடன், இறக்குமதியையும் நிறுத்துவோம். சிறு கைத்தொழில், மீன்பிடி துறைகளை பெருக்கி மக்களது கைகளில் பணப்புளக்கம் உள்ள பொருளாதாரத்தை கட்டி எழுப்புவேன்.
இளைஞர் யுவதிகளிற்காக தொழில்நுட்ப ரீதியான வேலை திட்டம் ஒன்றையும் உருவாக்குவோம். வவுனியாவை உள்ளடக்கிய பாரிய வேலை திட்டம் ஒன்று எமது அரசில் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். இங்கு இருக்கும் ஜந்து உள்ளூராட்சி சபைகளையும் மையப்படுத்தி, தகவல் தொழில் நுட்ப வளர்சியை ஏற்படுத்தி டியிட்டல் யுகத்தை உருவாக்குவேன். நாட்டில் பாரிய கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும் வியட்நாம், இந்தியா, கம்போடியா, பங்களாதேஸ் போன்ற நாடுகளில் உள்ள கைத்தொழில் பேட்டைகளை இங்கு நிறுவி அதன் மூலம் இளைஞர்களின் வேலை இல்லா பிரச்சினையை தீர்ப்பேன்.
சமுர்த்தி வேலைதிட்டம் எனது அரசாங்கத்தில் விரிவு படுத்தப்பட்டு ஏழ்மையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.எனது தந்தையே பாடசாலை சீருடை மற்றும் மாணவர்களிற்கான பகல் போசனம் என்பவற்றை வழங்கினார். அதனை என்னுடைய எதிர்தரப்பு வாதிகள் இடைநிறுத்தினார்கள். எதிர்வரும்16 ஆம் திகதி நாம் வெற்றிபெற்ற பின்னர் இரண்டு பாடசாலை சீருடைகளும், பாதணிகளும், பகல் போசனமும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
பாலர் பாடசாலை கட்டமைப்பு விரிவு படுத்தப்பட்டு அந்த ஆசிரியர்களிற்கு நிலையான ஒரு சம்பள கட்டமைப்பு அறிமுகப்படுத்தபடும். பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் பகல் போசனம் வழங்கபடும். சுகாதாரம்,மற்றும் குடும்ப சுகாதாரம், பாடசாலைகளின் அடிப்படை கட்டமைப்புகள் என்பவற்றை மாற்றி அமைப்போம். பெண்களின் உரிமைகளை பாதுகாத்து, இன மத பேதங்களை களைந்து சமூக நல்லிணக்கத்திற்கான விடயங்களை நாம் முன்கொண்டு செல்வதுடன்.ஒழுக்க விழுமியமுள்ள நாட்டை கட்டி எழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம்.
2025 ஆம் ஆண்டு ஆகும் போது நாட்டில் வீட்டுத் தேவை நிவர்த்தி செய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பமும் சொந்த வீடுகளில் வாழும் யுகம் ஏற்படுத்தப்படும். எனவே எதிர்வரும் தேர்தலில் எம்மை வெற்றிபெற செய்வதன் மூலம் புதிய யுகம் ஒன்றை உருவாக்குவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM