நாட்டின் முன்னணி தகவல் தொடர்பு தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிகொம் (ஸ்ரீல.ரெ.), உலக தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் சமூக தினத்தையொட்டி கடந்த 17 ஆம் திகதி புதிய தேசிய தொலைத்தொடர்பாடல் அருங்காட்சியகத்தை திறந்துவைத்துள்ளது..
பாதுக்கையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில், பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை பயன்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பாடல் கருவிகள் மற்றும் சாதனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை, இங்குவரும் பார்வையாளர்களுக்கு இலங்கையில் தொலைத்தொடர்பாடல்துறையில் படிப்படியாக ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை விளக்கமாக சொல்கின்றன.
இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமானது, நாட்டின் தொலைத்தொடர்பாடல்கள் துறையின் பாரம்பரியத்தையும் மரபையும் பாதுகாத்து, இந்த தேசிய பொக்கிஷத்தை நாட்டின் அனைத்து குடிமக்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதேயாகும். இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பாடல் சம்பந்தமான கருவிகள், உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் இலங்கையில் சமூக, பொருளாதார தொழினுட்ப அடிப்படையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தொலைத்தொடர்பாடல் எவ்விதம் பரிணாம வளர்ச்சியடைந்து வந்தது என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின்போது தொலைத்தொடர்புத் துறையில் பயன்படுத்தப்பட்ட கருவியும் இங்குண்டு, நவீன காலத்து ‘ஸ்மார்ட் ஃபோனும்’ உண்டு. பார்வையாளர்கள் இந்த இரண்டு காலகட்டத்து தொழில்நுட்பங்களையும் பார்த்து வியப்பதுடன், அவற்றை ஒப்பிட்டு இரசிக்கவும் கூடியதாக இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 150 வருடங்களாக நீண்டு வந்திருக்கும் இந்த தொலைத்தொடர்பாடல் பரிணாமவளர்ச்சியை நேரில் பார்ப்போருக்கு இது ஒரு கனவுக்காட்சியாக விரிகின்றது. இந்த அருங்காட்சியகம் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் ஆதரவளிக்கும் என ஸ்ரீல.ரெ. நம்புகிறது. வருங்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளை இந்த அருங்காட்சியகம் கவர்ந்திழுக்கும். உலக அருங்காட்சியகங்களின் வடிவமைப்புகளைப் பிரதிபலிக்கும் அதேநேரம், நவீனகாலத்து கட்டிடக்கலையையும் வெளிப்படுத்துவதாக இந்த தேசிய தொலைத்தொடர்பாடல்கள் அருங்காட்சியகம் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தை திறந்துவைத்தபின்னர் உரையாற்றிய ஸ்ரீல.ரெ. தலைவர் பி. ஜி. குமாரசிங்க சிறிசேன, “இது ஸ்ரீலங்கா ரெலிகொம்முக்கு மட்டும் சொந்தமானதல்ல முழு நாட்டுக்குமே சொந்தமான தேசிய சொத்தாகும். பிற தொலைத்தொடர்பு இயக்குனர்களும், இலங்கை குடிமக்களும் இந்த தொலைத்தொடர்பாடல்கள் அருங்காட்சியகத்திலிருந்து நிறைய விடயங்களை தெரிந்துகொள்ளலாம். எமது தொலைத்தொடர்பாடல் பாரம்பரியமும் அறிவுச்செல்வமும் நாட்டிலுள்ள அனைவருக்கும் பயன்படக்கூடியதாக தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்த அருங்காட்சியகமானது, பாதுக்கையிலுள்ள ஸ்ரீல.ரெ. இற்கு சொந்தமான செய்மதிப்புவி நிலையத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இச்செய்மதிப்புவி நிலையம் டிசம்பர், 1975 இல் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் திறந்துவைக்கப்பட்டது. இதுவே இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது செய்மதிப்புவி நிலையமாகும். இது INTELSAT IOR 60 பாகை செய்மதியுடன் பெறுவழியை கொண்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM